பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

 

பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

புயல், கடும் மழை பெய்யும் என ஒரு பக்கம் வானிலை நம்மைப் பயறுத்திக்கொண்டிருந்தாலும் அதெல்லாம் பிக்பாஸ் வீட்டில் எதுவும் இதுவரை எதிரொலிக்க வில்லை. சில விஷயங்கள் யாராவது தொடங்கி வைத்தால், மற்றவர்கள் சரசரவென தொடர்வார்கள் என்பார்களே… அப்படித்தான் பாலா – ஆரி சண்டை சிறப்பாகத் தொடங்கியதால் நேறும் அது வேறுவேறு வடிவங்களில் தொடர்ந்தது. கண்ணீர், சிரிப்பு, கோபம், சுயமரியாதை சீண்டல்… எனப் பல்வேறு உணர்வுகளோடு நிரம்பியிருந்தது நேற்றைய எப்பிசோட்.

50-ம் நாள் தொடர்ச்சி…

’டைம் முடியுது விக்கொடுக்கிறேன்’னு சொன்னதால வேணாம்னு சொன்னேன்’ என நிஷா மூக்கை உறிஞ்சிட்டு இருந்தார். ரியோ, அர்ச்சனா அண்ட் கோ ஓடோடிச் சென்று என்னாச்சு… என்னாச்சுனு விசாரிச்சிட்டு இருந்தாங்க. ‘உன் பின்னாடி ஒளிஞ்சிக்கிறேன். நீ சொல்லிக்கொடுக்கிற மாதிரி விளையாடுறேன்னு சொல்றாங்க… அப்படி இல்ல இல்லனு நூறு தடவை சொல்லியாச்சு… இந்த வீடே பொய்யா இருக்கு’னு நிஷா அழுதார்.

பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

நிஷா சொல்வதில் ஒரு நியாயம் இருக்கு. அவர் பெரிய அளவில் முடிவுகள் எடுக்கவில்லை. ஒரு சண்டையை தொடங்கவோ கலந்துகொள்ளவோ இல்லை. நாமினேஷனில்கூட ரியோவின் தேர்வுகளை நிஷா சொல்வது இல்லை. பொதுவான டாஸ்க்குகளிலும் முடிந்த பங்களிப்பைச் செய்கிறார் நிஷா. ‘யார் வெற்றி பெறணும் கேட்டால் ரியோ பெயர் சொல்வது என்பது அவரது விருப்பம்தான். மற்றவர்கள் யாரோ ஒருவரின் பெயரைச் சொல்லத்தானே செய்கிறார்கள். அப்படி நிஷா ஒருவரின் பெயரைச் சொல்கிறார் என்றே கொள்ள வேண்டும்.

பாலா, அனிதா இருவரின் மேலும் செம காண்டாகி வெளியே வந்தார் நிஷா. ‘நிஷாதான் ஜெயிச்சாங்க… அவங்க வேணாம்னு சொன்னதால எனக்கு கொடுத்தாங்க… நான் எடுத்துகிட்டேன்’னு அனிதா சொன்னார். ‘ஓஹோ’னு கேட்டுகிட்டார் ரம்யா.

பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

வெளியே வந்த நிஷாவிடம், ‘நான் பிக்பாஸ்கிட்ட பேசி, அந்த பாஸை திரும்ப கொடுத்திடுறேன்’னு அணத்திட்டு இருந்தார். பிக்பாஸ்கிட்டேயும் அதே அணத்தல். ஆனா, பிக்கி கடப்பாறையை முழுங்கின மாதிரி ஒரே சைலண்ட்.

ரமேஷிடம் போய் சமாதானப்படுத்தினார் நிஷா. இன்னொரு பக்கம் அனிதாவும் பாலாவும் சீரியஸாகப் பேசிட்டு இருந்தார். ‘பாஸைக் கொடுத்திடுறேன்… கொடுத்திடுறேன்னு சொல்லிட்டு இருந்தவர். இதெல்லாம் என் ஸ்டேட்டர்ஜி… நிஷா ஜெயிச்சிருந்தால் ஆஜித்தைத்தான் நாமினேஷன் பண்ணியிருப்பார். ஷனம் ஜெயிச்சிருந்தா சம்யுக்தாவைச் சொல்லியிருப்பாங்களான்னு தெரியல… அதான் நான் ஜெயிச்சு சம்யுக்தாவை கோர்த்துவிட்டேன்னு ப்ளானை விவரிச்சிட்டு இருந்தார். பாலாவே சம்யுக்தாவின் உளவாளினு தெரியாம… என்ன பேச்சு இது அனிதா?

தாய்மையைக் குறை சொல்லிட்டாங்கன்னு அர்ச்சனாவிடம் அணத்திட்டு இருந்தார் இன்னொரு பக்கம்.

51-ம் நாள்

‘கங்கம்’பாடலை ஒலிக்க விட்டார் அந்தத் தம்பி… ஆனா, ஆளாளுக்கு ஒரு பாட்டுக்கு ஆடிட்டு இருந்தாங்க. பாலாவை எழுப்பி விடறது மட்டுமில்லாம, கதவை எல்லாம் திறந்துவிட்டு சேவையாற்றினார் ஷிவானி. சம்யுக்தா, ரம்யா, ஷிவானி என டான்ஸ் குருப் இன்றைக்கும் தனியா ஆடிட்டு இருந்தாங்க.

பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

Y Blood; Same Blood என ஒரு டாஸ்க் கொடுத்தார். அதாவது வீட்டில் இரு அணிகள். ஒன்று, கால் செண்டருக்கு போன் செய்யணும். மற்றொரு அணி வரும் அழைப்பை எடுத்து பேசணும். அப்படிப் பேசுபவரை வெறுப்பேத்தி போனை கட் பண்ண வைக்கணும். இல்லாட்டி அடுத்த வாரம் நேரடியா எவிக்‌ஷனில் நாமினேட் ஆகிடுவாங்க. (பிக்கி பல நாள் மூளையைக் கசக்கி கண்டுபிடிச்ச டாஸ்க். அதனால நிச்சயம் கண்டண்ட் கிடைக்கும் என பட்சி சொல்லுச்சு)

ரியோ மற்றும் அனிதா பிரிக்கப்பட்ட அணிகளில் உள்ளவர்களைச் சொன்னார்கள். வழக்கம்போல அர்ச்சனா அண்ட் கோ எனப் பிரிக்கப்பட்டாலும் கேபி அந்தப் பக்கம் போனது ஆச்சர்யம்.

முதல் போன், அர்ச்சனாவிடமிருந்து பாலாவுக்குச் சென்றது. சுற்றி வளைக்காம நேரடியா விஷயத்து வந்தார் அர்ச்சனா. ‘நான் மூணு பேரைக் காப்பாதறதா சொன்னீங்களே… அவங்க யார்?” எனக் கேட்டார். ‘இப்படி நேரடியாக கேட்பாங்கன்னு பாலா எதிர்பார்க்கல… ஓரிரு நொடிகள் திணறினாலும் சமாளிச்சி, ‘சோம், ரியோ, கேபி’ என்றார். அது குறித்த வாக்குவாதங்கள் போயின. சளைக்காமல் ரிப்ளே பண்ணினார் பாலா.

பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

கேபியிடம் எங்களப் பற்றி என்ன சொன்னீங்கன்னு ஆரம்பித்து இன்னொரு பக்கம் சண்டையை இழுத்தார் அர்ச்சனா. அதுக்கும் பதில் சொல்லிட்டே இருந்தார் பாலா.  

அடுத்த ஆயுதத்தை எடுத்தார் அர்ச்சனா. ‘உங்க கையில யார் பெயரையோ பச்சை குத்தியிருக்கீங்களே… அது யாரு’னு கேட்க, அது பர்சனல் என சொல்லியும் விடாது அர்ச்சனா துரத்த, கையைக் காட்ட வந்தார். அந்த இடம் எடிட்டிங்கில் ஜம்ப் ஆனது.

ஷிவானியின் அன்பை 90 சதவிகிதம் நம்பறேன்னு சொன்னதும் ஷிவானி முக சுருங்கியது. (ஆனாலும் அது பற்றி கேள்வியே கேட்கல… பாலா எவ்வளவு சீண்டினாலும், சுயமரியாதையை இழந்து கொண்டே இருக்கிறார்)

பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

’அன்பை வெச்சே உன்னை வீழ்த்துவேன்’னு சபதம் போட்டு பழைய விஷயங்களைக் கிளறிட்டே இருந்தாலும், போனைக் கட் பண்ணுவதாக பாலா இல்லை. அதனால் பஸ்ஸர் ஒலிக்க, அர்ச்சனா தோல்வியடைந்தார்.

வெளியே வந்த பாலாவைக் குதற காத்திருந்தனர். முதலில் ஆரம்பிச்சது பாலாதான்.  ‘கேபி, உன்னை நம்பி ஒரு விஷ்யம் சொன்னா இப்படியா போட்டுக்கொடுப்பேனு கேட்டதும் கேபி பிடிபிடி என பிடித்தார். ‘அர்ச்சனா என்னை எப்படிக் காப்பத்தறாங்கன்னு சொன்ன?’னு கேள்வி கேட்க, சுரேஷ் தாத்தா போல கேள்வியிலிருந்து எஸ்கேப்பாக பல ராஜ தந்திரங்களைக் கையாண்டார்.

ஆனா, கேபி உக்கிரமாகக் களமாடிக்கொண்டிருந்தார். ‘ஆமா… ஐம்பது நாளைக்கு அப்பறம்தான் கேபிக்கு சத்தம் போட்டு பேச வரும்னு தெரியுது’என்பது போல மற்ற ஹவுஸ்மேட்ஸ் ரசிச்சிட்டு இருந்தாங்க. ’என்னை குழந்தைனு ஷிவானி கிட்ட சொன்னது எனக்குத் தெரியும்’னு கேபி சொன்னது நிஜமாகவே குழந்தைத்தனமாகத்தான் இருந்தது.

பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

ஆஜித் கேப்டன்ஷிப் நல்லா இல்லனு நேரில் சொல்லிட்டு, கமலிடம் பாராட்டி பேசறது என்ன விதமான நேர்மைனு கேபி கேட்டது சரிதான். பாலாவிடம் ஒரு பழக்கம் இருக்கு. எல்லாரும் எதிர்த்தா, அதை ஆதரிக்கணும். எல்லோரும் ஆதரிச்சா அதை எதிர்க்கணும். அதனால அவரின் அடிப்படை குணமே தெரியல… இல்ல மாறிடும்.

ஆரி, ரியோ, அர்ச்சனா எல்லாம் ஒன்றுகூட, ‘என்னை வில்லனா காட்டணும், என் பேரை டேமேஜ் பண்ணனும்.. அதானே’என நழுவினார் பாலா.

இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்கணும். ஒருவரை நம்பி ஒரு விஷயத்தைச் சொன்னால் ரகசியம் காக்கணும்னு சொல்ற பாலாதான், ரியோவுக்காக டாஸ்கில் விட்டுக்கொடுத்தேன்னு ஆரி சொன்னதை சபையில உடைச்சது. ‘குழந்தைன்னு சொன்னது தப்பான்னு கேட்கிற பாலா தான், அர்ச்சனா குழந்தைன்னு அவரைச் சொன்னபோது எகிறி எகிறி அடிச்சது. அதெப்படி தனக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்த தக்காளிச் சட்டினியா?

பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

கையில் பெயரை நீ காட்டுவதற்கு நான் வேணாம்னு சொல்லத்தான் நினைச்சேனு ஏழெட்டு பேர் மேல சத்தியம் செய்தார் அர்ச்சனா. அதை பாலா நம்புவதாகத் தெரியல.

அடுத்த போன், ஷனமிருந்து சம்யுக்தாவுக்கு. எங்கிட்ட பேசும்போது ‘கலீஜ்’ங்கிற வார்த்தையை ஏன் யூஸ் செய்ஞ்சீங்க’னு கிடுக்கி பிடி போட நினைச்சார். ஆனா, ‘நீங்க அழகா இருக்கிங்க… உங்க பேச்சு கலீஜ்ஜாக இருக்குனு’ ஷனம் வீசிய பாலை ஸ்கொயர் லெக் திசையில் பவுண்ட்ரிக்கு அனுப்பினார் சம்யுக்தா. ஒரு கட்டத்தில் யார் போன செய்திருக்கா.. யார் பதில் சொல்லணும்னே புரியல. ரொம்ப நேரம் ஷனமே பேசிட்டு இருக்க, சம்யுக்தாவுக்கு வாய்ப்பாக மாறிடுச்சு. ஒரு கட்டத்தில் ‘அவங்க வளர்ப்பு’ எனச் சம்யுக்தா சொல்ல, அதுக்கு ஷனம் ரிப்ளே தந்தார். டைம் முடிய ஷனம் தோற்றார். அந்தக் கடுப்பில், ஒரு ஸ்டார் மட்டும்தான் கொடுத்தார்.

பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

சம்யுக்தா வெளியே வந்ததும் சண்டை ஸ்டார்ட் ஆயிடுச்சு. ஆரி அதை முன்னெடுத்தார். சம்யுக்தா சொன்னது அர்ச்சனா அண்ட் குரூப்பைத்தான்.  ஆனா, சண்டைக்கு வந்தது ஆரி. ’நேத்து என் தாய்மையை குறை சொன்னீங்களே’னு சம்யுக்தா பாய, பாலா குறுக்கே புக, ரணகளமானது பிக்பாஸ் ஹவுஸ் (இதுக்குத்தானே ஆசைப்பட்டீர் பிக்கி)

ஒருவழியாக இருதரப்பும் ஸாரி கேட்க, முடிவுக்கு வந்தது யுத்தம். மற்ற ஹவுஸ்மேட்ஸ் அமைதிகாத்தது ஆச்சர்யம்தான்.

பாலாவுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? – பிக்பாஸ் 51-ம் நாள்

பல்வேறு சண்டைகளை மூட்டிவிடும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கால் செண்டர் டாஸ்க்கில், அனிதா, ஆரி எல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நினைச்சுப்பார்த்தாலே திகிலா இருக்கு.  கண்டண்ட் கிடைச்ச சந்தோஷத்துல பிக்கி பின்கதை சுருக்கம் பாட மறந்துட்டாரு. சுபம்.