10ம் வகுப்பு தேர்வு முடிவில் 5177 மாணவர்கள் மிஸ்ஸிங்! – தேர்வுத் துறை விளக்கம் அளிக்க கோரிக்கை

10ம் வகுப்பு தேர்வு முடிவில் 5177 மாணவர்கள் மிஸ்ஸிங்! – தேர்வுத் துறை விளக்கம் அளிக்க கோரிக்கை

இன்று வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 5177 மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது ஏன் என்பது பற்றி எந்த ஒரு விளக்கமும் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு முடிவில் 5177 மாணவர்கள் மிஸ்ஸிங்! – தேர்வுத் துறை விளக்கம் அளிக்க கோரிக்கை
கடந்த ஏப்ரல் மாதம் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. அப்போது தமிழக தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், 9,45,006 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் எனக் குறிப்பிட்டு இருந்தது.

10ம் வகுப்பு தேர்வு முடிவில் 5177 மாணவர்கள் மிஸ்ஸிங்! – தேர்வுத் துறை விளக்கம் அளிக்க கோரிக்கை
இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 9,39,829 பேர் தேர்வு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய அறிவிப்புக்கும் தற்போதைய அறிவிப்புக்கும் இடையே 5177 எண்ணிக்கை குறைவு உள்ளது.

10ம் வகுப்பு தேர்வு முடிவில் 5177 மாணவர்கள் மிஸ்ஸிங்! – தேர்வுத் துறை விளக்கம் அளிக்க கோரிக்கை
10ம் வகுப்பு தேர்வு முடிவானது காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட மாட்டார்கள் என்று செய்தி வெளியாகி இருந்தது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளிக்கவில்லை.
இந்த நிலையில் 5177 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லையா, அவர்கள் என்ன ஆனார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.