கொரோனா 2வது அலையில் 513 மருத்துவர்கள் உயிரிழப்பு!

 

கொரோனா 2வது அலையில் 513  மருத்துவர்கள் உயிரிழப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலையில் 513 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 2,08,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இன்று ஒரேநாளில் 4,157 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் 2,71,57,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,11,388 ஆக அதிகரித்துள்ளது. அதேபோ 2,43,50,816 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் இந்த பேரிடர் காலத்திலும் முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக மருத்துவர்கள், செவிளையார்கள் என பலர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு தங்கள் உயிரை இழந்து வருகிறார்கள்.

கொரோனா 2வது அலையில் 513  மருத்துவர்கள் உயிரிழப்பு!

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் இந்தியாவில் 513 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி அதிகபட்சமாக டெல்லியில் 103 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 18 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.ஆந்திராவில் 29 ,அசாமில் 6 ,பீகாரில் 96, குஜராத்தில் 31 ,ஜார்கண்டில் 29, மத்திய பிரதேசத்தில் 13, மகாராஷ்டிராவில் 15, ஒடிசாவில் 16, ராஜஸ்தானில் 39 ,தெலுங்கானாவில் 29 ,உத்தரபிரதேசத்தில் 41 ,மேற்குவங்கத்தில் 19 என மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுஇதுவரை பலியாகியுள்ளனர்.

கொரோனா 2வது அலையில் 513  மருத்துவர்கள் உயிரிழப்பு!

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் முன்களப்பணியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண தொகை, வீட்டில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலை என அறிவித்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளது.