10ம் வகுப்பில் தொடர்ந்து 33 வருடங்களாக பெயில்.. கொரோனா புண்ணியத்தால் இந்த வருஷம் பாஸான 51 வயது மாணவர்

 

10ம் வகுப்பில் தொடர்ந்து 33 வருடங்களாக பெயில்.. கொரோனா புண்ணியத்தால் இந்த வருஷம் பாஸான 51 வயது மாணவர்

கொரோனா வைரஸ் மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. அதேசமயம் கொரோனாவால் சிலருக்கு நல்ல விஷயங்கள் நடந்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. அப்படியொரு சம்பவம் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு நடந்துள்ளது. 33 வருடங்களாக 10ம் வகுப்பில் பாஸாக முடியாமல் தவித்து வந்த ஒருவர் கொரோனா புண்ணியத்தால் பாஸாகி விட்டார்.

10ம் வகுப்பில் தொடர்ந்து 33 வருடங்களாக பெயில்.. கொரோனா புண்ணியத்தால் இந்த வருஷம் பாஸான 51 வயது மாணவர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் 51 வயதான முகமது நூருதீன். அவர் கடந்த 33 வருடங்களாக பத்தாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து பெயிலாகி வந்தார். இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக, எந்தவொரு தேர்வும் எழுதாத நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தெலங்கானா அரசு அறிவித்தது. இதனால் முகமது நூருதீனும் பரீட்சையே எழுதாமால் பாஸாகி விட்டார். கடந்த 33 வருடங்களாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பெயிலான முகமது நூருதீன் இந்த ஆண்டு எழுதாலாமலே பாஸாகி விட்டார்.இது தொடர்பாக முகமது நூருதீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு உதவவோ அல்லது பயிற்சி அளிக்கவோ யாரும் இல்லாதால் நான் ஆங்கிலத்தில் பலவீனமாக இருந்தேன்.

10ம் வகுப்பில் தொடர்ந்து 33 வருடங்களாக பெயில்.. கொரோனா புண்ணியத்தால் இந்த வருஷம் பாஸான 51 வயது மாணவர்

ஆனாலும் எனது சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவுடன் நான் படித்தேன். கடந்த 33 வருடங்களாக தொடர்ந்து தேர்வில் பெயிலாகி வந்தேன். பாதுகாவலர் வேலைக்காக நான் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்து வந்தேன். என்னிடம் பத்தாம் வகுப்பு சான்றிதழ் கேட்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக 10 வகுப்பு சான்றிதழ் காட்டாமலேயே எனக்கு பாதுகாவலர் வேலை கிடைத்தது. 1989 முதல் பாதுகாவலர் வேலை செய்து வருகிறேன். நான் தற்போது மாத சம்பளமாக ரூ.7 ஆயிரம் வாங்கி வருகிறேன். எனக்கு 4 குழந்தைகள். கோவிட்-19 காரணமாக அரசு விலக்கு அளித்ததால் நான் தேர்ச்சி பெற்றேன். நான் தொடர்ந்து எனது படிப்புகளை தொடருவேன், பட்டப்படிப்பு மற்றம் பட்டமேற்படிப்புகளையும் நிறைவு செய்வேன். எங்கும் படித்த மனிதர்கள் மதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.