ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

2020 மார்ச் மாதம் கொரோனா அலை இந்தியாவில் வீசத் தொடங்கியது. உடனே மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படும் என்று கருதினர். மாறாக நாள்தோறும் புதிய நோயாளிகள் அதிகரித்துக்கொண்டே சென்றனர்.

புதிய நோயாளிகள் அதிகரித்தாலும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இறப்போரின் சதவிகிதம் குறைவதும் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்திகளே. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் குணம் பெற்றுள்ளனர்.

51,225 பேர் குணம் பெற்று வீடு திரும்பியதை அடுத்து, இந்தியாவில் கோவிட்-19 நோயில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11,45,629 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் குணம் அடைவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவை எட்டியுள்ளதை அடுத்து, கோவிட் பாதிப்பில் இருந்து குணம் பெறுவோர் விகிதம் 65.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது இன்னும் அதிகமான கோவிட் 19 நோயாளிகள் குணம் பெற்று வீடு திரும்புகின்றனர்.

முன்கள சுகாதார அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்களின் தன்னலமற்ற தியாகம், நாடு முழுக்க கோவிட் -19 பாதிப்புக்கு எதிராகப் போராடி வருபவர்களின் முயற்சிகள் காரணமாக, இதில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

குணம் பெறுபவர்கள் மற்றும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2020 ஜூன் 10 ஆம் தேதியன்று முதல் முறையாக, குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது. அப்போது அந்த இடைவெளி 1,573 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி இந்த இடைவெளி 5,77,899  ஆக உள்ளது. தற்போது கோவிட் நோய் பாதிப்புக்காக 5,67,730 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 32.43 சதவீதம். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

சிகிச்சை மேலாண்மை நடைமுறைகளை வெற்றிகரமாகவும், ஒருங்கிணைந்தும் அமல்படுத்தியதாலும், குணம் அடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மரண விகிதம் குறைந்து வருகிறது. இந்தத் தொற்று நோயால் மரணம் அடைவோர் சதவீதம் 2.13 சதவீதம் என்ற நிலையில், உலக அளவில் இந்தியாவில் தான் குறைந்தபட்சமாக உள்ளது.

Most Popular

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...

கடல்சீற்றத்தால் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம்!

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை பி கிராமத்தில் கடந்த 8.8.2020 அன்று கடல் சீற்றத்தினால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் மரியதாஸ் என்பவருடைய வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து,...