”ஆன்லைனில் பொருட்கள் வாங்க 51 % மக்கள் ஆர்வம்”- நுகர்வோர் மனநிலை குறித்த ஆய்வில் தகவல்

”ஆன்லைனில் பொருட்கள் வாங்க 51 % மக்கள் ஆர்வம்”- நுகர்வோர் மனநிலை குறித்த ஆய்வில் தகவல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நுகர்வோரின் வாங்கும் முன்னுரிமைகளும் அதிக மாற்றம் பெற்றுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பண்டிகை காலத்தில் 51 சதவீத மக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கவே ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.

”ஆன்லைனில் பொருட்கள் வாங்க 51 % மக்கள் ஆர்வம்”- நுகர்வோர் மனநிலை குறித்த ஆய்வில் தகவல்

லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டது. 300 நகரங்களில் 65 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், எண்ணற்ற புள்ளிவிபரங்கள் முடிவுகளாக கிடைத்துள்ளன. அதன்படி, 51 சதவீத மக்கள் வரும் பண்டிகை காலத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்கவே விரும்புவது தெரியவந்துள்ளது.

மேலும், நுகர்வோரின் செலவு செய்யும் அளவு குறித்த முடிவுகளும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி 44 சதவீத்தினர் ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யவும், 14 சதவீதத்தினர், 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்யவும், 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் 3 சதவீத்த்தினர் மட்டுமே பொருட்களை வாங்க வாய்ப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் 27 சதவீததினர் எந்த செலவும் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

”ஆன்லைனில் பொருட்கள் வாங்க 51 % மக்கள் ஆர்வம்”- நுகர்வோர் மனநிலை குறித்த ஆய்வில் தகவல்

மேலும், சிறு வியாபாரிகள் மற்றும் அருகாமையில் இருக்கும் சிறிய கடைகள் ஆன்லனை வியாபாரத்தை தொடங்கினால், அதில் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக 80 சதவீத த்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் பண்டிகை காலத்தில் 61 சதவீதம் பேர் ஏதாவது பொருட்கள் வாங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளனர். எனவே பண்டிகை கால விற்பனை களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவுகளில் இருந்து நுகர்வோரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. தொற்று பயம் காரணமாக பெரும்பாலான மக்கள், கடைத்தெருக்களுக்கு படையெடுத்து கூட்டத்திற்கு மத்தியில் பொருட்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர் என்பதையே இந்த முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. இதனால் ஆன்லைன் வியாபாரம் இனி களைகட்டும் என்றும் பல நிறுவனங்கள் ஆன்லைன் தளத்தில் அடியெடுத்து வைக்கும் என எதிர்பார்க்கலாம்..

”ஆன்லைனில் பொருட்கள் வாங்க 51 % மக்கள் ஆர்வம்”- நுகர்வோர் மனநிலை குறித்த ஆய்வில் தகவல்

-எஸ். முத்துக்குமார்