50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் வெல்லும்- அண்ணாமலைக்கு சவால்

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் வெல்லும்- அண்ணாமலைக்கு சவால்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் அக்கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை களம் இறங்கியிருக்கிறார். திமுக சார்பில் மொஞ்சனூர் இளங்கோ களமிறங்கியிருக்கிறார். இத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கும் செந்தில்பாலாஜி, இந்த முறை இந்த தொகுதியில் நிற்காமல் கரூர் தொகுதியில் நிற்கிறார்.

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் வெல்லும்- அண்ணாமலைக்கு சவால்

அண்ணாமலை நேற்று சைக்கிளில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாகவே அவர் அத்தொகுதியில் சைக்கிள் பந்தயம், மாரத்தான் நடத்தி பிரச்சாரம் செய்து வந்தார். வேட்புமனுவின்போதும் அப்படியே செய்திருக்கிறார்.

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் வெல்லும்- அண்ணாமலைக்கு சவால்

இளங்கோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘’அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர், அண்ணன் மொஞ்சனூர் இளங்கோ அவர்களை ஆதரித்து, அரவக்குறிச்சி பகுதி வேலம்பாடி ஊராட்சியில் கிராமம் கிராமமாக பிரச்சாரம். அரவக்குறிச்சி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் வெல்லும்’’என்று சொல்லி வருவதை அண்ணாமலைக்கு பெரும் சவாலாகவே அமைந்திருக்கிறது.

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் வெல்லும்- அண்ணாமலைக்கு சவால்