60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

 

60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் பாமக ஏ.வி.ஏ.கஸ்ஸாலி 22011 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

தமிழத்தின் 234 தொகுதிகளில் மிகவும் சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதி, 2011ம் ஆண்டு தேர்தலில் இருந்துதான் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி என்று பெரிய தொகுதியான மாறியது. 2006ம் ஆண்டு தேர்தல் வரைக்கும் சிறிய தொகுதியாக இருந்து, 2011ல்தான் மறு சீரமைக்கப்பட்டது. 77ல் நடந்த தேர்தலில் இருந்து 2016 தேர்தல் வரைக்கும் திமுக 9 முறை இத்தொகுதியில் வென்றிருக்கிறது. 91ல் நடந்த தேர்தலில் மட்டும் காங்கிரஸ் வென்றுள்ளது. மு.கருணாநிதி இத்தொகுதியில் மூன்று முறை வென்றிருக்கிறார். சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதில் இன்று வரைக்கும் திமுக கோட்டையாகவே இருந்து வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக பேச்சு இருந்ததால், பாஜக சார்பில் குஷ்பு இத்தொகுதியில் களமிறக்கப்பட ஏற்பாடுகள் நடந்து வந்தன. குஷ்புவின் இத்தொகுதியில் அலுவலகம் திறந்து, வீடு வீடாக சென்று மூன்று மாதங்கள் பிரச்சாரம் செய்து வந்தார். திடீரென்று அதிமுக கூட்டணியில் இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால், குஷ்புவும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

இதன்பின்னர் பாஜகவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியை ஒதுக்கியது அதிமுக. தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லி வந்த உதயநிதி ஸ்டாலினை, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் வேட்பாளராக அறிவித்தது திமுக. இத்தொகுதி திமுகவின் கோட்டைஎன்பதால், இங்கே நின்றால் வெற்றி உறுதி என்பதை கருத்தில் கொண்டே உதயநிதி இங்கே களமிறங்கினார்.

அதன்படியே, 60 ஆயிரம் வாக்குகள் வித்திசாயத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திமுக உதயநிதி 81601 வாக்குகளும், பாமக ஏ.வி.ஏ.கஸ்ஸாலி 22011 வாக்குகளும், நாம் தமிழர் ஜெயசிம்மராஜா 8361 வாக்குகளும், இந்திய ஜனநாயக கட்சி முகமது இத்ரீஸ் 3843 வாக்குகளும், அமமுக ராஜேந்திரன் 1666 வாக்குகளும் பெற்றுள்ளனர்.