சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்

 

சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து எவிக்‌ஷனில் ஒருவரை வெளியேற்றும் ஞாயிற்றுக்கிழமை எப்பிசோட். கூடவே கமல்ஹாசனின் அரசியல் பன்ச்கள் இருக்கலாம் என எதிர்பார்ப்புகள்… சக ஹவுஸ்மேட்ஸ் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை சொல்லும் என்ன விதமான விளையாட்டுகளை நடத்தப்போகிறார்… முந்தைய நாளில் முடியாத சில பஞ்சாயத்துகளுக்கு நேற்று விடை கிடைக்குமா… போன்ற பலவித எதிர்பார்ப்புகளுக்கு தீனியாக அமைந்தது நேற்றைய எப்பிசோட். அதுவும் நேற்றுடன் 50-வது நாள். டாப் தமிழ் நியூஸில் தொடர்ச்சியாக 50- நாளும் பிக்பாஸ் தினசரி நிகழ்வுகளின் அடிப்படையில் கட்டுரைகளை வழங்கி வந்திருக்கிறோம்.  (ஒரு விளம்பரம்.. J)

பிக்பாஸ் 50-ம் நாள்

சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்

அனிதா – சுசித்ரா – பாலா மூவரும் தீவிரமான டிஸ்கஸனில் இருந்தார்கள். அப்படியென்னதான் பேசறாங்கன்னு காதைக் கொண்டுபோனால், நிஷாவுக்கு ரியோ ஓட்டுப்போட்டது ஞாயமா? என்பதுதான். ‘அது மக்களுக்குத் தெரியும்’ என சுசி வேட்பாளரைப் போல பேச, எனக்குத் தெரியும் என அனிதா சொல்ல…. போதும்ப்பா நேரடியாக கமல் வரும் பகுதிக்கே போயிடலாம்.

வித்தியாசமான உடையோடு கமல் வந்தார். (அதை இந்தியன் படத்தின் நேதாஜி படை வீரன் என்று ஹவுஸ்மேட்ஸ் புகழ்ந்தார்கள்.) ஆஹான். 50-வது நாள் பற்றிய சிலாகிப்போடு நிகழ்ச்சியைத் தொடங்கினார் கமல். அதைக் கொண்டாடும் விதமாக டிஜிட்டல் பார்வையாளர் சிலரைப் பேச வைத்தார். முதல் இருவர் சம்பிரதாயமாகப் பேசினர். மூன்றாவதாக சமூக ஆர்வலர் பத்மப்ரியா பேசினார். ‘சார் ஒண்ணு கேட்கலாமா? என்று கேட்டதும், ஏதோ கிடுக்கிப் பிடி போடப்போகிறார் என்று நினைத்தால், கமல் அடிக்கடி பேசும் சுற்றுச்சூழல் மாசு பற்றி இவரும் சிலாகிக்க, நாம் சீக்கிரம் அகம் டிவிக்குள் போயிடுவோம்.

சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்

”நீங்க நொடிகளைக் கணக்கிட்டீங்க… நாளை விட்டுட்டீங்க.. இன்றைக்கு 50-வது நாள்” என்று சொன்னதும் ‘ஓஹோ… அப்படியா?’என சந்தோஷத்துடன் கைத்தட்டினர்.

‘கடந்த 50 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் உங்கள் பங்களிப்பு என்ன?’ என்பதை 1 நிமிடத்தில் பேச வேண்டும்’ என்றும், நிமிடத்தை கணக்கிட பாலாவை நியமித்ததும் சுவாரஸ்யம்.

முதலில் வந்த அனிதா, ’நான் நானாகவே இருந்தேன்… முடிந்தளவு என் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன்’ என்றார். அப்பவே நமக்கு ‘இதே ஃபார்மலாவை எல்லோரும் பின்பற்றுவாங்களே?’ என்று தோன்றியது. அதேபோலத்தான் பலரும் வேறுவேறு வார்த்தைகளில் இதைச் சொன்னார்கள்.

சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்

ஆஜித், சுசி இருவரும் இசையால் தங்கள் பங்களிப்பு செய்தவற்றைப் பட்டியலிட்டார்கள். கேபியும் ஷிவானியும் டான்ஸ் ஆடுவதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

பிக்பாஸ் வீடு, பார்வையாளர்கள், நான் என மூன்று விதங்களில் என் பங்களிப்பைச் செய்துவருகிறேன் என்று சுருக்கமாக முடித்தார் ரம்யா. ஹெல்த், பியூட்டி உள்ளிட்ட பல டிப்ஸ் தந்திருக்கிறேன் என்றார் சம்யுக்தா.

சொற்பொழிவு ஆரி, மிகக் குறுகிய நேரத்தில் பேசி முடித்தது ஆச்சர்யம். அதுவும் சினிமா, பாலாவுக்குக் கொட்ட்டு என நிறைய விஷயங்களை வேகவேகமாகப் பேசினார். சுகிசிவம் சொன்ன குட்டிக்கதையும் அதற்கு விளக்கத்தையும் சொல்லி ஒரு நிமிடத்தில் நிஷா சொன்னது வியப்பு.

சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்

‘தங்கள் துறையில் சான்ஸ் இல்லாதவர்கள்தான் பிக்பாஸ் வீட்டுக்கு வருவார்கள் என்று சொவார்கள். நான் பீக்கில் இருக்கும்போதுதான் வந்திருக்கிறேன். கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறேன்’என்று நிமிடம் முடிந்தும் பேசிட்டு இருந்தார்.

ஒரு நிமிடத்தில் வேகவேகமாகப் பேச வேண்டும் என்பதால் சோம் தயங்கி தயங்கி நின்றார். ஏனெனில், அவருக்கு சொற்கள் திக்கும் என்பது முன்பே சொல்லியிருக்கிறார். அவரை உற்சாகப்படுத்த உதவி இயக்குநராக இருந்த கலைமணியின் திக்குவாய் பற்றி கூறி உற்சாகமூட்டினார் கமல். சோம் எமோஷனாகி அழுதார். பிரேக்கில் அர்ச்சனாவை கட்டியணைத்து அழுதார்.

ஆஜித் கேப்டன்ஷிப் பற்றிய பேச்சு ஆரம்பித்தது. அர்ச்சனா, ஆரி, சுசி, ஆகியோர் சில குறைகள் சொன்னார்கள். ’ஆஜித்க்கு 19 வயசுதான். அவருக்கு இப்போ இருக்கும் நிதானம் இப்ப வரைக்கும் தனக்கு இல்லன்னு’ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் ஷனம். இப்போதான் ஆட்டத்திற்குள்ளேயே வந்திருக்கிறார் ஷனம். ’பிக்பாஸ் வீட்டின் யங்கஸ்ட் கேப்டன் ஆஜித்’என அனிதா எடுத்துக்கொடுக்க, எல்லோரும் கைத்தட்டினர்.

சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்

விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை… டிப் கொடுத்து உட்காரச் சொன்னார் கமல். சோம்ஸை காப்பாற்றப்பட்டதாகக் கமல் சொன்னதும் அர்ச்சனா நிம்மதியாக சாமியைக் கும்பிட்டார். அடுத்து பாலாவும் காப்பாற்றப்பட்டார்.

அனிதா – சம்யுக்தா = சுசித்ரா மூவரும் மட்டுமே எவிக்‌ஷனில் மீதம். ஓரளவுக்கு எல்லோராலும் யூகிக்க முடிந்தது. சுவாரஸ்யம் கருதி கொஞ்சம் நீட்டித்தார் கமல். மூவரில் யார் தங்க வேண்டும் எனக் கேட்டார். சம்யுக்தாவுக்கே ஓட்டுகள் விழுந்தன. சோம்ஸின் ஓட்டும் சம்யுக்தாவுக்கு விழ, விரக்தியாக ஷனமைப் பார்த்தார் அனிதா. ஷனம் அனிதாவைச் சொன்னார்.

சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்

இறுதியாக வெளியேற்றப்படுபவர் சுசித்ரா என்று அறிவித்தார் கமல். பெரிய அதிர்ச்சி வீட்டுக்குள் வெளியேயும் இருந்திருக்காது. ஆனால், சுசி இதை எதிர்பார்க்க வில்லை போல. அதனால், அவர் கூடவே வந்த ஷனம், அனிதாவிடம் மட்டும் சொல்லிவிட்டு உண்டியலை உடைத்துவிட்டு நேரே கேட்டுக்கு வந்து திற… திற எனக் கத்திட்டு இருந்தார். அர்ச்சனா அண்ட் குரூப் அமைதியாக வேடிக்கை பார்த்தது.

வெளியே வந்த சுசித்ராவிடம் கமல் ஹவுஸ் மேட்ஸ் பற்றிகள் பற்றிய ஒன்லைன் கேட்டார். அவர் சொன்னதில் சில..

ஷனம் – ஸ்வீட் ஹார்ட். ரியோ – மிட்நைட்டில் அவர்கள் டீமோடு ரகசியங்கள் பேசுவார்கள் இருமுகம் கொண்டவர்.

சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்

அர்ச்சனா = ரியோவுக்குச் சொன்னது அப்படியே. ரம்யா – லல்வி பர்சன். விளையாட்டைப் புரிந்து ஆடுறாங்க.

ஷிவானி – மோசமான வைபரேஷனே இவரிடமிருந்து கிடைத்தது. நிஷா – ஃபுல் ஃபேக். அனிதா – நல்ல பெண். எனக்கு கிடைத்த சொத்துகளில் ஒன்று.

ஆரி – நேர்மையானவர். என் பேச்சை முழுமையாகக் கேட்டவர். சோம் – ஸ்வீட் ஹார்ட். ஆனால், அர்ச்சனா டீமின் பெப்பட்.

பாலாவைப் பற்றி நெகிழ்ச்சியோடு பேசி, வீட்டுக்குள் இருக்கும் குழுக்களைப் பற்றியும் அதில் யார் யார் இருக்கிறார்கள் என்ற சீக்ரெட்களைச் சொன்னார். ரம்யா எல்லா டீம்லேயும் இருப்பாங்க. ஆனால், பெரும்பாலும் பாலா டீம்தான் என்றார்.

சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்

அனிதாவும் இப்போ ஆரி டீம்லேருந்து பாலா டீம்க்கு ஷிப்டாகிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. சுசிக்கு விடைக்கொடுத்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார் கமல்.

கமல் இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய புத்தகம். கரிசல் எழுத்தாளர் கி.ரா எழுதிய கோபல்ல புரத்து மக்கள். உண்மையிலேயே முக்கியமான புத்தகம். நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். நேற்றைய அறிவிப்பின்மூலம் இந்தப் புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்டால் நல்ல விஷயமே.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.