பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம் செய்ய தடை: 50 ஆயிரம் பேர் ஏமாற்றம்

 

பவானி கூடுதுறையில்  திதி, தர்ப்பணம் செய்ய தடை: 50 ஆயிரம்  பேர் ஏமாற்றம்

பவானி கூடுதுறையில் மஹாளய அமாவாசைக்காக முன்னிட்டு திதி, தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது வழக்குபதிவு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை. விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் காவிரி, பவானி, அமுத நதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடமான பவானி கூடுதுறையில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் வேதநாயகி உடனமர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையன மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய தமிழக முழுவதும் இருந்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடுவது வழக்கம்.

பவானி கூடுதுறையில்  திதி, தர்ப்பணம் செய்ய தடை: 50 ஆயிரம்  பேர் ஏமாற்றம்

இந்நிலையில் கொரோனா தோற்று பரவல் காரணமாக பொதுமக்கள் யாரும் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் தடையை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படுமா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதனால் ஆற்றங்கரையில் மக்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காலை சுமார் 7.00 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அவர்கள் சாமிக்கு பூஜை செய்ய கொண்ட தேங்காய் பழம் பூ போன்றவை கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை .இதனால் கூடு துறையை தவிர்த்து காவேரி கரை ஓரத்திலும் காலிங்கராயன் கால்வாய் ஓரத்திலும் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் பொதுமக்கள் கொடுத்தனர்.