’’அதிமுக கூட்டணி 50 சீட்டுகளைத் தாண்ட முடியாது’’-பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி

’’அதிமுக கூட்டணி 50 சீட்டுகளைத் தாண்ட முடியாது’’-பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு தேர்தல் பணிகள் செய்து வந்த ஐபேக் பிரசாந்த் கிஷோர் தான், மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பணிகள் செய்து வந்தார்.

’’அதிமுக கூட்டணி 50 சீட்டுகளைத் தாண்ட முடியாது’’-பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி

இரு மாநில தேர்தல் முடிவுகளையும் இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தி ரிபப்ளிக் டிவி எனும் ஆங்கில தொலைக்காட்சிக்கு அத்தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமிக்கு பிரசாந்த் கிஷோர் சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார்.

அந்த பேட்டியில், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தின் தேர்தல் நிலைமை குறித்து அர்னாப் கோஸ்வாமி எழுப்பிய கேள்விக்கு பரபரப்பு பதிலளித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

’’அதிமுக கூட்டணி 50 சீட்டுகளைத் தாண்ட முடியாது’’-பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி

’’ நான் முன்பே சொன்னதுதான். இப்போதும் சொல்கிறேன். மீண்டும் மீண்டும் இதையேதான் சொல்வேன். மேற்கு வங்காளத்தை பொருத்தவரைக்கும் பாஜக அங்கே 100 தொகுதிகளை தாண்ட முடியாது. பாஜக 100 இடங்களை தாண்டும் என்று அமித்ஷா உள்ளிட்டோர் கூறிவருகிறார்கள். ஆனாலும் அங்கே பாஜக 100 தொகுதிகளை தாண்ட முடியாது என்பதுதான் என் கணிப்பு. அதையும் மீறி 100 தொகுதிகளை பாஜக தாண்டிவிட்டால் தேர்தல் உத்தி வகுப்பாளர் என்ற என் தொழிலையே நான் விட்டு விடுகிறேன்’’ என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் அவர்.

’’அதிமுக கூட்டணி 50 சீட்டுகளைத் தாண்ட முடியாது’’-பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி

மேலும், ’’தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் வாக்குப் பதிவுக்கு பின்னர் எனக்கு கிடைத்த தகவல் படி சொல்கிறேன்… திமுகவுக்கு எதிரான மொத்த எதிர்க்கட்சிகளுக்குமே 50 சீட்டுகளை தாண்ட முடியாது. அதாவது அதிமுக கூட்டணி என்று இல்லை திமுக கூட்டணிக்கு எதிரான அனைத்து கட்சிகளுமே மொத்தமாக சேர்த்து 50 சீட்டுகளை தாண்ட முடியாது’’ என்று கூறி அதிர வைத்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.