சொத்து பிணையமில்லா அவசர கால கடன்: ஈரோட்டுக்கு ரூ.500 கோடி கடன் அனுமதி

 

சொத்து பிணையமில்லா அவசர கால கடன்: ஈரோட்டுக்கு  ரூ.500 கோடி கடன் அனுமதி

மத்திய அரசு கோவிட்-19 நோய்த் தாக்குதல் மற்றும் முடக்க நிலை அமல் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் இதர செயல்பாடுகளை மீட்டெடுக்க ‘சொத்து பிணையமில்லா அவசர கால கடன்” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சொத்து பிணையமில்லா அவசர கால கடனுக்கு வங்கிகள் மூலம் ரூ.500 கோடி கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அறிவித்துள்ளார்.

சொத்து பிணையமில்லா அவசர கால கடன்: ஈரோட்டுக்கு  ரூ.500 கோடி கடன் அனுமதி

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் மேலும் தெரிவித்துள்ளதாவது: ‘சொத்து பிணையமில்லா அவசர கால கடன்” திட்டமானது, குறு, சிறு மற்றும்
நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஏற்கனவே வங்கியில் பெற்ற கடனில் 29.02.2020 அன்று உள்ள நிலுவைத் தொகையில் (அதிகபட்சமாக கடன் நிலுவை-ரூ.50.00 கோடி) 20 சதவீதம், அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை கூடுதல் சொத்து பிணையம் பெறாமல் அவசர கால கடனாக உடனடியாக ஒப்பளிப்பு செய்வதாகும். இக்கடன் மூலம் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்குதல், மேம்படுத்துதல், நடைமுறை மூலதனமாக பயன்படுத்துதல், புதிய இயந்திரங்களை நிறுவுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் வங்கிக்கடன் பெற்ற அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும்; பயன்பெற மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கைகளை முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலமாக எடுத்து வருகிறது.

முதலமைச்சர் 17.07.2020 அன்று ஈரோடு வருகையின் வரை, 8,329 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.349.81 கோடி கடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதில், தொழிற் கூட்டமைப்பு நிறுவனங்களுடனான கலந்துரையாடலில், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலர் மூலம் ஈரோடு மாவட்டத்திற்கான இத்திட்டத்தின் இலக்காக ரூ.500 கோடி நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு வாரமும் இத்திட்டத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த வங்கியாளர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின்
கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதின் விளைவாக, ஆகஸ்ட் மாத முடிவில்ஈரோடு மாவட்டத்தில் 11,999 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.524.63 கோடி கடன் பெற்று 8,755 நிறுவனங்கள் ரூ.404.63 கோடியை பயன்படுத்தியுள்ளனர்.

சொத்து பிணையமில்லா அவசர கால கடன்: ஈரோட்டுக்கு  ரூ.500 கோடி கடன் அனுமதி

இத்திட்டம் 31.10.2020 வரை நடைமுறையில் இருப்பதால் ஈரோடு மாவட்டத்தில் எஞ்சியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இதில் பயன் பெற
தொடர் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.’

இத்திட்டம் 31.10.2020 வரை நடைமுறையில் இருப்பதால் ஈரோடு மாவட்டத்தில் எஞ்சியுள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்களும் பயன் பெற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.