50 ஆயிரம் பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்த ரஷ்யா!

 

50 ஆயிரம் பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்த ரஷ்யா!

கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்காத நாடே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. ஆயினும் அதற்கு எதிரான போரை உலகமே மேற்கொண்டு வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 71 லட்சத்து 72 ஆயிரத்து 352 பேர்.

50 ஆயிரம் பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்த ரஷ்யா!

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 674 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்து விட்டது. தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,13,83,034 பேர்.

ரஷ்யாவில் தொடக்கத்தில் கொரோனா பரவல் குறைவாக இருந்தது. தற்போது அங்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது,

ரஷ்யா, கொரோனாவினால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.

50 ஆயிரம் பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 28,77,727 பேர். இவர்களில் 22,95,362 பேர் குணமடைந்து விட்டனர். இறப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்து, 51,351 என்ற நிலையில் நிற்கிறது.

செப்டம்பர் இறுதி வாரம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் அதற்கு அடுத்து சரசரவென அதிகரித்து வருகிறது. டிசம்பர் 6-ம் தேதியன்று ஒரே நாளில் 29,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டுமே 28,948 பேர் புதிய நோயாளிகளாகக் கண்டறியப்பட்டனர்.

50 ஆயிரம் பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்த ரஷ்யா!

ஒரே நாளில் அதிக மரணம் எனும் வகையில் டிசம்பர் 11-ம் தேதி 613 பேர் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது.