டிசம்பர் மாசத்துக்குள்ள 50000 குடும்பத்தை இந்த செல்போன் காப்பாத்த போகுதாம் -எப்படினு கேக்கறீகளா? இப்படிதான்..

டிசம்பர் மாசத்துக்குள்ள 50000 குடும்பத்தை இந்த செல்போன் காப்பாத்த போகுதாம் -எப்படினு கேக்கறீகளா? இப்படிதான்..

நம் நாட்டில் கொரானா தொற்று பலரின் வேலை வாய்ப்புகளை காலி செய்திருந்தாலும் ,இன்னும் நான்கு மாதத்துக்குள் புதியதாக 50000பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகப்போகிறதாம் .
பாக்ஸ்கான் ,விஸ்டரின், சாம்சங் ,டிக்சன் ,லாவா போன்ற ஸ்மார்ட் போன் நிறுவனங்கள், அரசின் ஆதரவுடன் இந்தியாவில் பல இடங்களில் தங்களின் தொழிற்சாலைகளை நிறுவப்போகிறதாம் .,இதனால் ஐம்பதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பை பெறுவார்களாம் .

டிசம்பர் மாசத்துக்குள்ள 50000 குடும்பத்தை இந்த செல்போன் காப்பாத்த போகுதாம் -எப்படினு கேக்கறீகளா? இப்படிதான்..

மொபைல் செல்லுலர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அஸோஸியேஷன் தலைவர் பங்கஜ் மொஹிந்தூர் கூறுகையில் ,இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி 1100 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் ,கடந்த ஜூன் மாதத்தில் 50000 கோடி இந்த துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ,மேலும் இந்தியாவில் கொரானா தொற்றுக்கு பிறகு இப்போது பொருளாதார வளர்ச்சிக்கு அரசு நிறைய சலுகைகளை வழங்கி இந்த துறையின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பதால் 50000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்குமென்று கூறினார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஆத்மா நிர்பர் பாரத்’திட்டத்தின் மூலம் இந்தியாவை தொழில் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றும் முயற்சியில், இந்த தகவல் தொழில் துறையில் ஒரு புரட்சி ஏற்படுத்த உள்ளோம் என்றார்.

டிசம்பர் மாசத்துக்குள்ள 50000 குடும்பத்தை இந்த செல்போன் காப்பாத்த போகுதாம் -எப்படினு கேக்கறீகளா? இப்படிதான்..