மு.க அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி!

 

மு.க அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி!

புதிய கட்சி தொடங்குவது குறித்து மு.க.அழகிரி நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்கை பெற்றிருக்கும் மு.க அழகிரி, கடந்த 2014ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர், அரசியல் செயல்பாடுகளில் தலையிடாமல் இருந்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் எனது பங்கீடு நிச்சயம் இருக்கும் என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பரான மு.க. அழகிரி அவருடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்து விட்டார்.

மு.க அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி!

இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவதா? என விரைவில் அறிவிப்பேன் என்று மு.க அழகிரி கூறியிருந்தார். இன்று மதுரையில் இருக்கும் துவாரகா பேலஸில், அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மு.க அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி!

அழகிரி வீட்டில் இருந்து மண்டபம் வரை வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனர்கள் மற்றும் பதாகைகளில் கருணாநிதி, மு.க.அழகிரி, அழகிரியின் மகன் துரை தயாநிதியின் படங்கள் இடம் பெற்றுள்ளன. மதுரை முழுவதும் மு.க அழகிரியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும் நிலையில், அதில் உதயமாகிறது “கலைஞர் திமுக” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலமாக, அவர் புதிய கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்பை மு.க அழகிரி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.