500 கிலோ நோய்வாய்ப்பட்ட ஆட்டு இறைச்சி பறிமுதல் : உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை!

 

500 கிலோ நோய்வாய்ப்பட்ட ஆட்டு இறைச்சி பறிமுதல் : உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை!

சேலத்தில் நோய்வாய்ப்பட்ட ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக கொரோனா வைரஸ் கோழி இறைச்சியின் மூலம் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் அந்த தகவலில் உண்மையில்லை என்றும் அது இன்னும் உறுதி செய்யப் படவில்லை என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக ஏற்கனவே மக்கள் பீதியில் இருக்கும் நிலையில், சேலத்தில் நோய்வாய்ப்பட்ட ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள இறைச்சிக் கடைகளில் நோய்வாய்ப்பட்ட ஆட்டு இறைச்சி விற்கப் படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. 

ttn

அந்த தகவலின் படி பால்பண்ணை, கொல்லப்பட்டி, இரும்பாலை பகுதிகளில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டு இறைச்சி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப் படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கடைகளிலிருந்து சுமார் 500 கிலோ ஆட்டு இறைச்சியையும், 3 ஆடுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சுகாதாரமில்லாத முறையில் விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.