அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் அவருக்கு 19 நிமிடங்களுக்குப் பின் பஸ் ஆல்ட்ரினும் நிலவில் கால்வைத்து இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டது. 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதிதான் மனிதகுலத்தின் அந்த மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டது. ஆம்ஸ்டராங்கும் ஆல்டிரினும் இரண்டரை மணி நேரம் நிலவில் சுற்றி திரிந்து, 21 கிலோ எடை கொண்ட கற்களை சேகரித்தனர்.
அறிவியலின் மாபெரும் இச்சாதனை நடந்து ஐம்பதாண்டுகள் நிறைவுபெறுவதைக் கொண்டாடும் வகையில் கூகுள் தனது முகப்புப் பக்கத்தையும் மாற்றியுள்ளது. நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை ஆய்வு செய்ததில், 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் எரிமலை வெடித்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. வரும் 22ஆம் தேதி இந்தியா தமது சந்திராயன் 2-ஐ, நிலவுக்கு அனுப்புகிறது.