• December
    13
    Friday

Main Area

Main



இன்னும் சில மாதங்களில் 50 ஆயிரம் பேருக்கு வேலை...... காஷ்மீர் கவர்னர் தகவல்...

சத்ய பால் மாலிக்
சத்ய பால் மாலிக்

இந்த மாத தொடக்கத்தில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியது. இதனால் அங்கு எந்தவித வன்முறைகளும் நிகழாமல் இருப்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் தலைவர்கள் காவலில் வைப்பு, தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிப்பு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது.

 வேலைவாய்ப்பு

இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் பல்வேறு துறைகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பட உள்ளதாக காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: அடுத்த சில மாதங்களில் எனது அரசு பல்வேறு துறைகளில் 50 பணியிடங்களை நிரப்ப உள்ளது. ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 3 பகுதிகளிலும் இதுவரை இல்லாத மிகப்பெரிய  வேலைவாய்ப்பு நிகழ்வு, எனவே  இளைஞர்கள் முன்வந்து மற்றும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.

ஆப்பிள்

ஆப்பிள் பயிருக்கு குறைந்தபட்ச வழங்குவது தொடர்பாக எனது அரசு பல்வேறு மத்திய துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்திய தேசிய விவசாய கூட்டுறவு வர்த்தக கூட்டமைப்பு, ஜம்மு அண்டு காஷ்மீரில் உற்பத்தியாகும் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆப்பிளை ரூ.5 ஆயிரம் கோடிக்கு வாங்க ஆர்வமாக உள்ளது. இதனால் 7 லட்சம் ஆப்பிள் விவசாயிகள் பலன் அடைவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.