புதிய வரலாறு படைக்க உள்ள சென்செக்ஸ் – 50 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது!

 

புதிய வரலாறு படைக்க உள்ள  சென்செக்ஸ் – 50 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது!

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றன. இன்றைய வர்த்தகத்திலும் பங்குச் சந்தைகள் புதிய உச்சபட்ச வர்த்தகத்தை கண்டுள்ளன. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 45,500 புள்ளிகளைக் கடந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகம் தொடங்கி உள்ள நிலையில், இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் அதன் தாக்கம் எதிரொலித்தது. குறிப்பாக பார்மா துறை பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஆதாயத்தைக் கொடுத்தன. இதுதவிர ஆட்டோமொபைல் மற்றும் நிதிச் சேவைத் துறை நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றத்தை சந்தித்தன.

புதிய வரலாறு படைக்க உள்ள  சென்செக்ஸ் – 50 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது!

வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனை 2021 ஆம் ஆண்டில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என ரிசவ்ர் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது. இந்த நிலையிலும் பங்குச் சந்தைகளில் நிதிச் சேவை நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டுள்ளதும் பங்குச்சந்தை ஏற்றத்துக்கு காரணமாக உள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீடுகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், இந்திய பங்குச் சந்தையில் ஆரோக்கியமான போக்கு காணப்படுகிறது.

நேற்றைய வர்த்தகத்தை சென்செக்ஸ் 49 புள்ளிகளை கடந்து உச்சம் தொட்ட நிலையில், இன்றைய வர்த்தகத்தில் 247 புள்ளிகள் அதிகரித்து 49517 புள்ளிகளில் முடிவடைந்து உச்சத்தை தொட்டுள்ளது,
தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி இதுவரை இல்லாத அளவாக 14,563 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் முடிந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சென்செக்ஸ் அதுவரை இல்லாத அளவாக மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டது. இந்த நிலையில், தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டதும் பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் தொடங்கியுள்ளது. வரும் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அவற்றை வினியோகம் செய்யும் பணிகள் இன்று தொடங்கியுள்ளதும் பங்குச்சந்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய வரலாறு படைக்க உள்ள  சென்செக்ஸ் – 50 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது!

இன்றைய தினசரி வர்த்தகத்தில், டாட்டா மோட்டார்ஸ் பங்குகள் 7 சதவீதம் வரை லாபம் கொடுத்தன. கெயில், எய்ச்சர் மோட்டார்ஸ், எஸ்பிஐ, கோல் இந்தியா பங்குகள் கணிசமான லாபம் அளித்தன. இந்துஸ்தான் யூனிலீவர், ஆசியன் பெயிண்ட்ஸ், டைட்டம் நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் வீழ்ச்சியை கண்டன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தற்போது 73. 31ரூபாயாக உள்ளது. இதற்கு முன்னர் 73.42 ரூபாய், 73.38 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டு வருவது பங்குச் சந்தைக்கு நல்ல சமிக்கையாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ பங்குகளில்1647 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அளித்துள்ளன. 1387 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு இழப்பை அளித்துள்ளன. 158 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தகத்தை கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.