ஓபிசி இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

ஓபிசி இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
மருத்துவ படிப்புகளில் மத்திய அரசு ஒதுக்கீட்டில் முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது நிறுத்தப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

ஓபிசி இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு“மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்துவைத்த வாதத்தை நீதிமன்றம் நிராகரிக்கிறது. இதை அமல்படுத்த மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இட ஒதுக்கீட்டை வழங்க சட்ட ரீதியாக, அரசியலமைப்பு ரீதியாக தடை இல்லை. ஓ.பி.சி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்

ஓபிசி இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்புஅகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்கு அரசியல் அமைப்பு ரீதியாக எந்த தடையும் இல்லை. மாநில கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி-க்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று மருத்துவ கவுன்சிலில் எந்த விதியும் இல்லை.
மாநில அரசு ஒப்படைத்த, மத்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களை நிரம்பும்போது இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை கோர அரசுக்கு உரிமை உள்ளது” என்று கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் பயன்பெறுவார்கள்.