விமானத்தில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு 50% கட்டணச் சலுகை – ஏர் இந்தியா நிறுவனம்

விமானத்தில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு 50% கட்டணச் சலுகை – ஏர் இந்தியா நிறுவனம்

விமான பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு 50 % கட்டணச் சலுகை வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் மத்திய அரசு பல தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கால் களையிழந்த வியாபாரங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர பல நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அளித்து வருகிறது.

விமானத்தில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு 50% கட்டணச் சலுகை – ஏர் இந்தியா நிறுவனம்

அந்த வகையில் ஏர் இந்தியா நிறுவனம், 60 வயது நிறைந்த, உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்குகட்டண சலுகையாக 50% அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதேபோல் சலுகை பெறும் மூத்த குடிமக்கள் எக்னாமிக் வகுப்பில் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு 50% கட்டணச் சலுகை – ஏர் இந்தியா நிறுவனம்

3 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் புக் செய்ய வேண்டும், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஏர் இந்தியா வழங்கியுள்ள மூத்த குடிமக்களுக்கான அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல் பயணம் செய்யும் நாளன்றும் இந்த ஆவணங்களை மீண்டும் கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படாது.