சென்னையில் 50% மக்கள் மாஸ்க் அணிவதில்லை – மாநகராட்சி ஆணையர்

 

சென்னையில் 50% மக்கள் மாஸ்க் அணிவதில்லை – மாநகராட்சி ஆணையர்

சென்னையில் 50% மக்கள் மாஸ்க் அணிவது இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து, இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் மக்கள் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றினால் தான், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

சென்னையில் 50% மக்கள் மாஸ்க் அணிவதில்லை – மாநகராட்சி ஆணையர்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , சென்னையில் 50% மக்கள் மாஸ்க் அணிவதில்லை என தெரிவித்தார். பருவமழை காலத்தில் வெப்பம் குறைந்து காணப்படும் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை ஜூலை மாதமே தொடங்கிவிட்டது என்றும் அவர் கூறினார். மேலும், டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.