கொரோனா தடுப்பு பணிக்கு கூடுதலாக 50 வாகனங்கள் இயக்கம்!

 

கொரோனா தடுப்பு பணிக்கு கூடுதலாக 50 வாகனங்கள் இயக்கம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் படுக்கை வசதிகள், கூடுதல் உபகரணங்கள், சிறப்பு மருத்துவமனை முகாம்கள் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிவேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு பணிக்கு கூடுதலாக 50 வாகனங்கள் இயக்கம்!

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குக் கூடுதலாக 50 வாகனங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் கொரோனா தடுப்பு பணிக்காக 50 துரித செயல் வாகனங்களை பழனிசாமி கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். மேலும், அந்த வாகனங்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறைக்கென தொடக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.