கோரத்தாண்டவமாடும் கொரோனா… நீதிமன்றத்தில் 50% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி!

 

கோரத்தாண்டவமாடும் கொரோனா… நீதிமன்றத்தில் 50% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. உயிரிழப்பும் படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனிடயே நீதிமன்றத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி சுகாதாரத் துறைச் செயலர் தலைமை நீதிபதிக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா

இச்சூழலில் கொரோனா பரவலைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை ஆகியவற்றில் அனைத்துப் பிரிவுகளும் 50 சதவீதப் பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மே 1ஆம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். ஊழியர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவினருக்கும் இரண்டு நாட்கள் பணி என சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.