சென்னை மெட்ரோ அறிவித்த அதிரடி ஆஃபர் : மிஸ் பண்ணாதீங்க மக்களே!

 

சென்னை மெட்ரோ அறிவித்த அதிரடி ஆஃபர் : மிஸ் பண்ணாதீங்க மக்களே!

இரண்டு நாட்கள் சென்னை மெட்ரோ ரயில்களில் 50% கட்டண சலுகை அளிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ அறிவித்த அதிரடி ஆஃபர் : மிஸ் பண்ணாதீங்க மக்களே!

தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தினம் இன்று உகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் பெருமளவில் பங்களித்துள்ளனர். இதனால் தமிழகத்திலும் உகாதி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

சென்னை மெட்ரோ அறிவித்த அதிரடி ஆஃபர் : மிஸ் பண்ணாதீங்க மக்களே!

இருப்பினும் கடந்த முறை கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் புத்தாண்டு களையிழந்து காணப்பட்டது.இந்நிலையில் உகாதி மற்றும் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு இன்றும், நாளையும் சென்னை மெட்ரோ ரயில்களில் 50% கட்டண சலுகை அளிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.அனைத்து ஞாயிற்று கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களுக்கும் இந்த கட்டண சலுகை பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.