#MeTooஒரு மணி நேரத்துக்கு 50 முதல் 60… மவுண்ட்ரோடில் இருக்கும் இடத்துக்கு அடிக்கடி வரச்சொல்லுவார்.. வைரமுத்து மீது பிரபல சேனல் விஜே புகார்

#MeTooஒரு மணி நேரத்துக்கு 50 முதல் 60… மவுண்ட்ரோடில் இருக்கும் இடத்துக்கு அடிக்கடி வரச்சொல்லுவார்.. வைரமுத்து மீது பிரபல சேனல் விஜே புகார்

என்னை அவரது ஓட்டல் அறைக்கு அழைத்தார் என்று கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய குற்றச்சாட்டினால் 2018ல் திரையுலகம் அதிர்ந்தது.

பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கில் கடந்த 2006ம் ஆண்டில் #MeToo இயக்கம் உருவானது. இதனால் உலகமெங்கிலும் சினிமா, அரசியல் என அனைத்து துறை ஆண்களையும் அலற வைத்தனர் பெண்கள்.

#MeTooஒரு மணி நேரத்துக்கு 50 முதல் 60… மவுண்ட்ரோடில் இருக்கும் இடத்துக்கு அடிக்கடி வரச்சொல்லுவார்.. வைரமுத்து மீது பிரபல சேனல் விஜே புகார்

அந்த வகையில் 2008ம் ஆண்டில் தன்னிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சின்மயி வைரமுத்து மீது பகீர் குற்றச்சாட்டை வைத்தார். தன்னை வைரமுத்து ஓட்டல் அறைக்கு அழைத்ததாகவும் தான் மறுத்துவிட்டதாகவும் கூறியதோடு அல்லாமல், வைரமுத்து தனது அலுவலகத்தில் இரண்டு பெண்களை முத்தமிட முயன்றதாகவும் அவர்கள் மறுத்துவிட்டனர் என்றும் தொடர் குற்றச்சாட்டை கூறிவந்தார்.

இதையடுத்து வைரமுத்து மீது இன்னும் சிலரும் குற்றம் சுமத்தி வந்து, அந்த பரபரப்பு இப்போது அடங்கி இருக்கும் நிலையில், மீண்டும் பற்ற வைத்திருக்கிறார் சின்மயி.

#MeTooஒரு மணி நேரத்துக்கு 50 முதல் 60… மவுண்ட்ரோடில் இருக்கும் இடத்துக்கு அடிக்கடி வரச்சொல்லுவார்.. வைரமுத்து மீது பிரபல சேனல் விஜே புகார்

பிரபல தமிழ் சேனலில் விஜேவாக இருக்கும் பெண் ஒருவரும் வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அதைப்பற்றி மீ டூ மூலமாக வெளியே சொல்ல முன்வந்தபோதும், அவரது மாமியாரும் மாமனாரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே, என்னிடம் கொட்டித்தீர்த்தார். அவர் சொல்லி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை இப்போது ஷேர் செய்கிறேன் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களில் இந்த பெண் 17ஆவது பெண் என்றும் கூறி அதிரவைத்திருக்கிறார்.

#MeTooஒரு மணி நேரத்துக்கு 50 முதல் 60… மவுண்ட்ரோடில் இருக்கும் இடத்துக்கு அடிக்கடி வரச்சொல்லுவார்.. வைரமுத்து மீது பிரபல சேனல் விஜே புகார்

நான் காலேஜில் படிக்கும்போதே புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்துவை சந்திச்சேன். அவருகிட்ட ஆட்டோகிராப் கேட்டபோது, தொலைபேசி நெம்பரையும் எழுதி இருந்தார். அப்போது நான் அதை கண்டுகொள்ளவில்லை. பிறகு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்தபோது வைரமுத்துவை சந்தித்தேன். அப்போது அவர் என் நெம்பரை கேட்டார். நானும் எதைப்பற்றியும் யோசிக்காமல் கொடுத்திட்டேன்.

அதன் பிறகுதான் அவரின் தொல்லை அதிகமானது. ’நான் கனவில் கண்ட தேவை நீதான்’என்று அவர் சொன்னபோது அதிர்ந்தேன். மவுண்ட் ரோடு அருகே இருக்குற இடத்துக்கும் அடிக்கடி வரசொல்லி கூப்பிட்டார். ஒரு மணி நேரத்துக்கு 50 முதல் 60 தடவையாவது போன் செய்துவிடுவார்.

அலுவலகத்தில் உள்ளவர்கள் மூலமாக அவரின் மனைவியிடம் சொல்லி அவரை அடக்கி வைத்தேன் என்று தன்னிடம் தெரிவித்ததாக சின்மயி அதில் பதிவு செய்திருக்கிறார்.