50 வருடங்களாக பட்டாசே வெடிக்காத தமிழக கிராமம்! நெகிழ வைக்கும் காரணம்!

 

50 வருடங்களாக பட்டாசே வெடிக்காத தமிழக கிராமம்! நெகிழ வைக்கும் காரணம்!

தீபாவளி ஷாப்பிங் களை கட்டத் துவங்கியுள்ளது. விதவிதமான ஆடைகளையும், பட்டாசுகளையும் பொதுமக்கள் வாங்க துவங்கியுள்ள நிலையில், கடந்த 50 வருடங்களாக தீபாவளி பண்டிகைக்கு மட்டுமல்லாமல், எந்தவொரு நிகழ்ச்சிக்குமே பட்டாசே வெடிக்காத தமிழகத்தின் அதிசய கிராமம் ஒன்று உள்ளது எல்லாரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இத்தனை வருடங்களாக இந்த கிராமத்து மக்கள் பட்டாசு வெடிக்காததன் காரணம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

crackers

தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலக்கோட்டை கிராம மக்கள் தான் இத்தனை ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வந்திருகின்றனர். இந்த பரக்கலக்கோட்டை கிராமத்தில் பல ஆண்டுகளாக ஊருக்கு மத்தியில் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருந்து வருகிறது. இந்த ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் குடியிருந்து வருகின்றன. இந்த பறவைகளுக்கு ஒரு சின்ன தொந்தரவு கூட கொடுக்காத இப்பகுதி மக்கள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்படும் வெடிகளின் சப்தம் இந்த பறவைகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்கிற காரணத்திற்காகவே கடந்த 50 ஆண்டு காலமாக கிராமத்தில் யாருமே பட்டாசு வெடிப்பதில்லை. இந்த வௌவால்களை பார்வையிட சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலரும் அக்கிராமத்திற்கு வருகை தருகின்றனர். பல வௌவால்கள் வாழும் இந்த ஆலமரத்தை ஒரு கோயில் போல நினைத்து, அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.