50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை – கோடாலி தைலம்!

 

50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை – கோடாலி தைலம்!

முந்தின தலைமுறையில் பலர் நம்மூரிலிருந்து பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்று ஒவ்வொருமுறையும் ஊர் திரும்பும்போது, பையில் பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக கோடாலி தைலம் கண்டிப்பாக இருக்கும். இல்லையென்றால், ஊரில் இருக்கும் கிழவிகளுக்கு பதில் சொல்லி மாளாது.

வானுயர்ந்த கட்டிடங்கள், அமைதியான அரசாங்கம், சுத்தமான பொதுவெளி என சிங்கப்பூருக்கு எவ்வளவோ ஹைலைட்ஸ் இருந்தாலும், Axe Oil எனும் கோடாலி தைலத்திற்கென தனி இடம் உண்டு. முந்தின தலைமுறையில் பலர் நம்மூரிலிருந்து பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்று ஒவ்வொருமுறையும் ஊர் திரும்பும்போது, பையில் பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக கோடாலி தைலம் கண்டிப்பாக இருக்கும். இல்லையென்றால், ஊரில் இருக்கும் கிழவிகளுக்கு பதில் சொல்லி மாளாது. மூட்டுவலி, உடல்வலி என பல்வேறு உபாதைகளால் அவதியுறும் வயதானவர்களுக்கு கோடாலி தைலம் அருமருந்தாகும்.

Axe Brand Universal Oil

1928ஆம் ஆண்டு சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த லியூங் யுன் எனும் சீனர், ஷ்மிட்லர் எனும் ஜெர்மானிய மருத்துவர் அளித்த மருத்துவ குறிப்புகளைக் கொண்டு கோடாலி தைலத்தை தயாரித்தார். தலைவலி, உடல்வலிக்கான நிவாரணமாக சீன தயாரிப்புகள் கடும் போட்டியை அளித்ததால், நிறுவனத்தின் லோகோவை வித்தியாசமாக வடிவமைத்தார். வீடு வீடாக துண்டு பிரசுரங்கள்தான் கோடாலி தைலத்தின் பிரதான மார்க்கெட்டிங் உத்தி. கடல்வழிப் பயணமாக சவுதிக்கு ஹஜ் யாத்திரை சென்றவர்களுக்கு ஏற்படும் கடல்நோய்களான‌ (Sea Sick) தலைசுற்றல், வாந்தி போன்றவற்றுக்கு கோடாலி தைலம் சிறந்த நிவாரணியாக இருந்ததால், சவுதியில் பெரிய வியாபார வாய்ப்பை பெற்றது கோடாலி தைலம்.

Axe Oil

இன்று ஆசிய கண்டத்தில் மிக முக்கிய பிராண்ட் மட்டுமல்ல, சிங்கப்பூரின் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற முன்னணி பிராண்டாகவும் திகழ்கிறது. வலி உள்ள இடங்களில் கோடாலி தைலத்தின் சில துளிகளை இட்டு நன்றாக மசாஜ் செய்வதன்மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும். மூக்கடைப்பு ஏற்பட்டுள்ள நேரங்களில், சில துளிகளை கைக்குட்டையில் விட்டு முகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு நீங்கும். வாய்வு மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு வயிற்றின்மேல் தைலத்தை நன்றாக தேய்த்து, சுத்தமான துணியை சூடான நீரில் நனைத்து தைலம் தேய்த்த பகுதிகளை மூடிவைத்தால், வயிறு அசவுகரியங்கள் நீங்கும்.