50 நிமிஷத்தில் மூன்று… வாழ்நாள் முழுக்க பராத்தா ப்ரீ! – ஹரியானாவில் பலே ஆஃபர்

 

50 நிமிஷத்தில் மூன்று… வாழ்நாள் முழுக்க பராத்தா ப்ரீ! – ஹரியானாவில் பலே ஆஃபர்

இதன் பராத்தா அந்த பகுதியில் மிகவும் ஃபேமஸ்.இந்த நிலையில் கடையின் உரிமையாளர் வெளியிட்ட அறிவிப்பு இந்த கடைக்கு கூட்டத்தை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது. 
இங்கு தயாரிக்கபபடும் பராத்தாக்கள் ஒவ்வொன்றும் 2 கிலோ எடை கொண்டதாகவும், 2.5 அடி அகலம் கொண்டதாகவும் இருக்கும்.

50 நிமிடத்திற்குள் மூன்று பராத்தா சாப்பிட்டால்,அவர்கள் வாழ்நாள் முழுக்க இலவச பரோட்டா வழங்கப்படும் என்று ஹரியானா ஹோட்டல் ஒன்று அறிவித்திருப்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோக்கத் – டெல்லி பைபாஸ் சாலையில் தபாஸ்யா பராத்தா ஜன் ஜங்ஷன் என்ற ஹோட்டல் உள்ளது.இதன் பராத்தா அந்த பகுதியில் மிகவும் ஃபேமஸ்.இந்த நிலையில் கடையின் உரிமையாளர் வெளியிட்ட அறிவிப்பு இந்த கடைக்கு கூட்டத்தை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது. 
இங்கு தயாரிக்கபபடும் பராத்தாக்கள் ஒவ்வொன்றும் 2 கிலோ எடை கொண்டதாகவும், 2.5 அடி அகலம் கொண்டதாகவும் இருக்கும்.இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகப்பெரிய பராத்தாக்களில் ஒன்றாக இது இருக்கிறது. இதை சாப்பிடுபவர்களுக்கு பரிசு என்று கடை உரிமையாளர் அறிவித்துள்ளார்.

haryana baratha

ஒன்று, இரண்டு இல்லை மூன்று பராத்தாக்களை 50 நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தால் அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க பராத்தா இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நம் ஊரில் மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டக்கள் போன்றது இல்லை இந்த பராத்தா. கோதுமை மாவில் உள்ளே மசாலா வைத்து தயாரிக்கப்படும்.இவ்வளவு எடை கொண்ட பராத்தா ஒன்றை ஒருவர் சாப்பிடுவதே முடியாதது.மூன்று சாப்பிடுவதை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
இந்த 2.5 கிலோ எடை கொண்ட பராத்தாவின் விலை ரூ.150 முதல் 300. உள்ளே வைக்கப்படும் மசாலாவைப் பொருத்து விலை மாறுபடும்.குடும்பமே சாப்பிடும் அளவுக்கு பெரிதான இந்த பராத்தா சவாலை தினமும் யாராவது ஒருவராவது முயற்சி செய்து பார்க்கின்றார்கள்,யாராலும் முடியவில்லை என்று கடை உரிமையாளர் பெருமையுடன் கூறுகிறார்.இந்த சவால் பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாமலே உள்ளதாம்.ஹரியானா சென்றால் முயன்று பாருங்கள்.