50 சதவீத ஆர்டர்கள் கேன்சல்… ஏற்றுமதி துறையில் 1.50 கோடி வேலை வாய்ப்புகள் மாயம்…..

 

50 சதவீத ஆர்டர்கள் கேன்சல்… ஏற்றுமதி துறையில் 1.50 கோடி வேலை வாய்ப்புகள் மாயம்…..

50 சதவீத ஆர்டர்கள் கேன்சல் மற்றும் எதிர்காலம் இருண்டு இருக்கும் என முன்னறிவிப்பு காரணமாக ஏற்றுமதி துறையில் 1.50 கோடி வேலைவாய்ப்புகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கால் உள்நாட்டு வர்த்தகம் மட்டுமின்றி நம் நாட்டின் ஏற்றுமதியும் முடங்கி கிடக்கிறது. இதனால் ஏற்றுமதியாளர்கள் கடுமையான எதிர்விளைவுகளை சந்தித்து வருகின்றன. இது தொடர்பாக இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் சரத் குமார் சராப் கூறியதாவது:

சரத் குமார் சராப்

50 சதவீத ஆர்டர்கள் கேன்சல் மற்றும் எதிர்காலம் இருளாக இருக்கும் முன்னறிவிப்புகளால் ஏற்றுமதி துறை 1.50 கோடி வேலைவாய்ப்பு இழப்புகளை காணலாம். ஏற்றுமதி நிறுவனங்களில் வாராக்கடன் அதிகரிக்கும். ஏற்றுமதி நிறுவனங்களிடம் குறைந்த அளவே ஆர்டர்கள் கைவசம் உள்ளன. குறைந்தபட்ச பணியாளர்களை வைத்து குறித்த நேரத்தில் ஆர்டர்களை முடிக்க தொழிற்சாலைகளை அனுமதிக்கவில்லை என்றால் பலர் ஈடுசெய்ய முடியாத இழப்பு சந்திப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்பு

ஏற்றுமதிக்கு துறைக்கு மத்திய அரசு உடனடியாக நிவாரண பேக்கேஜ் அறிவிக்க வேண்டும். மேலும் குறைந்தபட்ச பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு, சானிடைசன் மற்றும் சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்றி ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளை செயல்பட உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய கடன்களின் முதிர்வை 90 முதல் 180 நாட்கள் நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளையும் மத்திய அரசு இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.