50 ஆயிரம் பாம்புகளைப் பிடித்த கேரளத்தின் ஸ்நேக் மாஸ்ட்டர்..! பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி..! 

50 ஆயிரம் பாம்புகளைப் பிடித்த கேரளத்தின் ஸ்நேக் மாஸ்ட்டர்..! பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி..! 

கேரளத்தின் புகழ்பெற்ற பாம்புப் பிடாரன் வாவா சுரேஷ்.இவரை கேரள மீடியாக்கள் ஸ்னேக் மாஸ்ட்டர் என்றுதான் குறிப்பிடுகின்றன.
கேரளத்தில் ஊருக்குள் வரும் பாம்புகளைப் பிடித்து காப்பாற்றுவதுதான் சுரேஷின் முழுநேர தொழில்.

snake

இதுவரை வழிதவறி ஊருக்குள் வந்த 50 ஆயிரம் பாம்புகளை காப்பாற்றி இருக்கிறார் சுரேஷ்.அதில் 176 ராஜ நாகங்களும் அடக்கம்.இவரது புகழுக்கு ஒரு சாம்பிள் சொல்வதென்றால், இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் சார்லஸ் கேரளா வந்தபோது சுரேஷை விரும்பி சந்தித்ததைச் சொல்லலாம்.

suresh

சுரேஷ் இதற்கு முன்பே இரண்டு முறை பாம்புக்கடி பட்டு சிகிச்சை பெற்று இருக்கிறார். நேற்று பத்மநாபபுரம் கல்லற பகுதியில் ஒரு வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்க வந்திருக்கிறார் சுரேஷ்.அந்தப் பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்துக்கொண்டு கிளம்பும் போது,ஊர் மக்கள் பாம்பை பார்க்க ஆசைப்பட்டு இருக்கிறார்கள்.அவர்களது கோரிக்கையை ஏற்று பாட்டிலுக்குள் இருந்த பாம்பை வெளியே எடுத்தபோதுதான் அந்த பாம்பு சுரேஷை கடித்து விட்டது.

suresh

சுரேஷிடம் இருந்த மருந்துகளைக் கொண்டு முதலுதவி செய்த பிறகு சுரேஷ் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் நலம் நன்றாக இருப்பதாகவும்,ஆனால் அடுத்த 72 மணி நேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று திருவனந்தபுரம் மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.