50 ஆண்டுகள் , அதே கணவருடன் வாழ்ந்த ஹாலிவுட் அதிசயம்…ஷோபிய லாரன்!

50 ஆண்டுகள் , அதே கணவருடன் வாழ்ந்த ஹாலிவுட் அதிசயம்…ஷோபிய லாரன்!

அவர் பெறாத அவர்டுகளே இல்லை,ஜூலியஸ் சீசர் புகழ் ரிச்சர்ட் பர்ட்டன்,பென்ஹர் புகழ் சார்ல்டன் ஹெஸ்ட்டன்,கேரி கிராண்ட்,பீட்டர் செல்லர்ஸ்,பால் நியூமென்,கிரிகோரிபெக்,மார்லன் பிராண்டோ என்று அவருடன் ஜோடிபோடாத சூப்பர்ஸ்டார்களே இல்லை.

பிறந்தது இத்தாலியில்.தந்தையின் முகத்தைக்கூடப் பார்த்ததில்லை.14 வயதில்
சோஃபியா இத்தாலிய கலையுலகில் நுழைந்த போது அவரது அழகு கேலி செய்யப்பட்டது என்பது இன்றைய ரசிகர்களுக்கு நம்ப முடியாத செய்தியாக இருக்கும்.

sophia loren

அப்போதெல்லாம் கதாநாயகிகள் கொழுக் மொழுக்கென்றுதான் இருந்தார்கள்.அந்த காலத்தில் கொடியுடையுடன் வந்து நின்ற ஷோஃபியாவுக்கு அன்றைய ஹாலிவுட் வைத்த பெயர் டூத் பிக்.அதாவது பல்குச்சி!
ஆனால்,அவரை பார்த்த உடனே , ஒருசர்வதேச நட்சத்திரம் தன் முன்னே நிற்பதைப் புரிந்து கொண்டார் ஒரு இத்தாலிய தயாரிப்பாளர்.அவர் பெயர் கார்லோஸ் பாண்ட்டி.அவர் ஷோபியாவை விட இருபது வயது பெரியவர்.
திருமணம் ஆகி மனைவியைப் பிரிந்த வாழ்கிறவர்.அவரால் ஷோபியா மீது வைத்த கண்களை விலக்கவே முடியவில்லை.அவர் ஷோபியாவுக்கு சின்னஞ்சிறு இத்தாலிய சினிமா உலகம் எற்றதல்ல என்று முடிவு செய்தார்.அதனால் 17 வயது ஷோபியாவை அழைத்துக்கொண்டு ஹாலிவுட் வந்தார்.

sophia loren

முதல் படம் ஹவுஸ் போட்.நாயகன் கான் வித் தி விண்ட் நாயகனும் அன்றைய சூப்பர் ஸ்டாருமான கேரி கிராண்ட், ஷோபியாவின் அழகில் மயங்கினார். இப்படி அன்றைய ஹாலிவுட் நாயக்ர்கள் வரிசையில் நின்றபோதும் ஷோபியா 1957 செப்டம்பர் 17ம் தேதி தன்னைவிட இருபது வயது மூத்த கார்லோஸ் பாண்ட்டியைத் திருமணம் செய்து கொண்டார்.

அன்றைய இத்தாலிய திருமணச் சட்டத்தின்படி இந்த திருமணம் செல்லாது, விவாகரத்து பெறுவதற்கு வாடிகனின் அனுமதி வேண்டும் என்பதால் ஷோபிய லாரனும் கார்லோஸ் பாண்டியும் ஃபிரஞ்சு குடியுரிமை பெற வேண்டி இருந்தது.

sophia loren

2007 வரை,அதாவது 50 ஆண்டுகாலம் கார்லோஸ் பாண்ட்டியும் ஷோபியா லாரனும் இணைந்து வாழ்ந்தனர்.அவர்களின் இரண்டு மகன்களும் இப்போதும் ஹாலிவுட்டில் இருக்கிறார்கள். 85 வயது ஷோபியா இப்போது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.ஷோபியா லாரனின் ஒரு சகோதரி இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் மறுமகள் என்பது ஒரு உதிரி செய்தி!