Home சினிமா 50 நாட்களில் உலக அளவில் சாதனைப் படைத்த பிகில்! அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி ட்வீட்

50 நாட்களில் உலக அளவில் சாதனைப் படைத்த பிகில்! அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி ட்வீட்

தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்த பிகில் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைகின்றன. 

அட்லி இயக்கத்தில் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான ’பிகில்’ படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், இந்தூஜா, அம்ரிதா ஐயர், ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூல் வேட்டையிலும் சாதனை படைத்தது. இந்த படம் வெளியாகி 50 நாட்களான நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

 

 

அதில், “50 நாட்களைக் கடந்து உலக அளவில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படமாக பிகில் மாறியுள்ளது. இதற்காக, படத்தை விரும்பி தியேட்டரில் பார்த்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து #50DaysOfIndustryHitBIGIL என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

மருதாணியால் கூந்தலுக்கு இத்தனை நன்மைகளா?

பழங்காலத்தில் இருந்தே அழகுக் குறிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது மருதாணி. விழாக் காலங்களில் கைகளில் அரைத்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்பட்ட மருதாணி, கூந்தல் பராமரிப்பிலும் இன்றியமையாததாக மாறிவிட்டது. பல இடங்களில்...

ஏப்ரல் மாதத்திற்குள் கேஸ், பெட்ரோல், டீசல் விலை குறையும்- அமைச்சர் தர்மேந்திர பிரதான்

வாரணாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ரஷ்யா, கத்தார் மற்றும் குவைத்திடம், உற்பத்தியை அதிகரிக்க இந்தியா அழுத்தம்...

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், புதுமாப்பிள்ளை பலி!

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். கிருஷ்ணகிரி...

உங்களுக்கு அல்சர் பிரச்னை இருக்கா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க போதும்!

நமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் முட்டைக்கோஸ், தன்னுள் மனித உடலுக்கு தேவையான பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனை, ஜூஸாக அரைத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்,...
TopTamilNews