இந்தியாவில் இருந்து ‘அந்த நாட்டுக்கு’ போனால் 5 வருஷம் ஜெயில்!

 

இந்தியாவில் இருந்து ‘அந்த நாட்டுக்கு’ போனால் 5 வருஷம் ஜெயில்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. நம் நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டுக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டினாலும், பல நாடுகள் நம் நாட்டுடனான விமான சேவையை தற்காலிகமாக துண்டித்துள்ளன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை ரத்து செய்தது.

இந்தியாவில் இருந்து ‘அந்த நாட்டுக்கு’ போனால் 5 வருஷம் ஜெயில்!

விமான சேவையை ரத்து செய்தும், பிற நாடுகள் வழியாக பலர் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்கிறார்கள். ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியா சென்றனர். இவ்வாறு ஆஸ்திரேலியா செல்பவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்களே ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி வருபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் 66 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 3ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.