சரக்கு வாகன விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

சரக்கு வாகன விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

மணியாச்சி அருகே விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சரக்கு வாகன விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

தூதுக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே இன்று காலை சரக்கு வாகனம் ஒன்று சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வாகனத்தில் சென்ற மணக்காடு, மணப்படை கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சரக்கு வாகன விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

சரக்கு வாகனத்தில் விபத்தில் சிக்கிய பெண்கள் அனைவரும், களை பறிக்க காட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்ததாகவும் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.