குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #ChildCare

 

குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #ChildCare

நாம் பெரிய சந்தோஷத்தில் இருந்தோம் என்பதைக் கேட்பவர்களுக்குப் புரிய வைப்பதற்கு ‘பொம்மை கடைக்குள் நுழைந்த குழந்தைபோல’ என்ற உவமையைச் சொல்லியிருப்போம். குழந்தைகளுக்குப் பொம்மைகள் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு இந்த உவமையே நல்ல உதாராணம். முன்பெல்லாம் வேப்ப மரம் அல்லது இலுப்பை மரத்தில் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்துகொடுப்பார்கள். அது இரண்டு விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும். ஒன்று, மகிழ்ச்சியோடு விளையாட வைக்கும். அடுத்து, மரப்பாச்சி பொம்மையை வாயில் வைத்துச் சுவைக்கும்போது அதன் கசப்புத் தன்மை செரிமானத்தைக் கொடுக்கும். ஆனால், இப்போதெல்லாம் பிளாஸ்டிக், ரப்பர் பொம்மைகளே கடைகளில் கிடைக்கின்றன. வேறு வழியில்லாமல் நாமும் அவற்றைத்தான் வாங்கியும் கொடுக்கிறோம்.

அப்படி, குழந்தைகளுக்குப் பொம்மைகள் வாங்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஐந்து விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #ChildCare

1. பெண் – ஆண் பேதம் பார்க்காதீங்க: குழந்தைகளுடன் செல்லாமல் நாம் மட்டும் பொம்மைக் கடைக்குச் செல்லும்போது, அந்தக் கடைக்காரர் கேட்கும் முதல் கேள்வி, யாருக்குப் பொம்மை பாப்பாவுக்கா, தம்பிக்கா? என்பதுதான். ஆமாம், ஆண் குழந்தைகள் எனில், மோட்டர் பைக், ஹெலிகாப்டர், கார் போன்ற பொம்மைகளும், பெண் குழந்தை என்றால், பார்பி டால், ஏஞ்சல், சத்தம் எழுப்பும் நாய் போன்ற பொம்மைகளுமாகத் தேர்வு செய்யும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. இதன் எதிரொலியாகத்தான் கடைக்கார்ர் கேட்கிறார். குழந்தைகளில் பால் பேதம் பார்க்கக்கூடாது என்று சொல்லி வளர்க்கும் காலம் இது. ஆண்களை விடப் பெண்கள் நிறையத் துறைகளில் சாதிக்கும் காலம் இது. இப்போதும் பொம்மைகளில் ஆண் – பெண் வகைப் பார்த்து வாங்காதீர்கள். பொம்மை வகைகளைப் போல நிறங்களும் முக்கியம். பெண் குழந்தைகள் என்றாலே பிங் கலரை கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்யும் பழக்கத்தை மாற்றுங்கள்.

குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #ChildCare

2. சின்னச் சைஸ் வேண்டாம்: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனில், மிகச் சிறிய பொம்மைகள் வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும். சிறிய பொம்மைகள் என்று மட்டுமில்லாது, பெரிய பொம்மைகளின் கழுத்தில், கையில் எனச் சின்னச் சின்னப் பொருட்கள் பிரித்து எடுக்கும்படி இருந்தால் அந்த வகைப் பொம்மைகளை வாங்க வேண்டாம். ஏனெனில், இந்த வயது குழந்தைகளுக்குப் பார்க்கும் பொருட்களை வாயில் போட்டு சுவைக்கும் பழக்கம் இருக்கும். சிறிய பொருளாக இருந்தால் விழுங்கி விட வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம் தேவை.

குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #ChildCare

3. கூர்மை தவிர்: சிறிய பொம்மைகளுக்குச் சொன்ன அதே காரணங்கள்தான் கூர்மையான பொம்மைகளுக்கும். விளையாடும் வேகத்தில் குழந்தைகள் நிதானம் இழந்துவிடுவார்கள். அந்த மாதிரியான நேரங்களில் குழந்தைகளின் உடலில் கூர்மையான பொம்மைகளால் காயம் ஏற்பட்டுவிடலாம். அதுவும் கண் போன்ற உறுப்புகளில் பட்டுவிட்டால் வாழ்நாள் முழுக்கப் பிரச்னையாக மாறிவிடலாம். எனவே, கூர்மையான விஷயங்கள் இருக்கும் பொம்மைகளைத் தவிர்க்கலாம்.

குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #ChildCare

4. உள்ளுக்குள் என்ன இருக்குமோ – சில பொம்மைகள் எடையற்றதாக இருக்கும். ஆனால், அவை நிற்பதற்காக, படுக்கை வாக்கில் இருப்பதற்காக அதன் எடையைச் சமன் செய்ய வேண்டிருயிருக்கும். அதனால், அதன் அடிப்பாகத்தில் எடை அதிகரிக்க மண், கல் போன்றவற்றை வைத்து அடைத்திருப்பார்கள். சில பொம்மைகளில் கண்ணாடித் துகள்கூட இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, நீங்கள் வாங்கும் பொம்மைகளில் அப்படி ஏதேனும் உள்ளதா என்று பரிசோதிக்க மறக்காதிர்கள். ஒருவேளை அப்பொம்மையைத்தான் வாங்க விருக்கிறீர்கள் எனில், அதை எப்படி விளையாட வேண்டும் எனக் குழந்தையிடம் விளக்கமாகச் சொல்லுங்கள் அல்லது அவர்களோடு விளையாடிக் காட்டுங்கள்.

குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #ChildCare

5. வீட்டுக்கு ஏற்றவாறு: நாம் வாங்கும் பொம்மைகளை வீட்டில் வைத்துதான் குழந்தைகள் விளையாட விருக்கிறார்கள். அதனால், வீட்டின் அளவு, சுற்றுப்புறம் பார்த்து வாங்குவது நல்லது. உதாரண்மாக, சிறிய வீடு எனில், நீண்ட தூரம் செல்லும் பேட்டரி கார் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

பொம்மைகள் வாங்குவதற்குப் பணம் செலவிட்டதற்கு இணையாக, குழந்தைகளோடு பெற்றோர் விளையாட நேரமும் செலவிட்டால் குழந்தைகளும் மகிழும். பொம்மைகளை வைத்துக் குழந்தைகள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதைச் செக் பண்ணவும் முடியும்.