Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் கொரோனா காலத்தில் சைக்கிளிங் செல்வோர் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்

கொரோனா காலத்தில் சைக்கிளிங் செல்வோர் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்

சைங்கிளிங் என்பது புதிய கலாச்சாரமாகவே மாறிவிட்டது. உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று பணத்தை விரயமாக்க வேண்டாம் என நினைக்கும் பலரின் முதல் சாய்ஸ் சைக்கிளிங்தான்.  

தற்போது பல குழுக்கள் சைக்கிளிங் காகத் தொடங்கப்பட்டு விட்டன. வாட்ஸப், ஃபேஸ்புக் மூலம் ஒன்றிணையும் பலரும் இணைந்து சைக்கிளிங் செல்வது வழக்கமாகி விட்டது.

உடல் எடையைக் குறைக்கவும், கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைக்கவும் உடல் சுறுசுறுப்பாக இருக்கவும் என ஒவ்வொருவருக்கும் தனித் தனி காரணங்கள் இருக்கும். காரணம் எதுவாக இருந்தாலும் சைக்கிளிங் என்பது ஆரோக்கியமான பழக்கமே. அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

தீவிர நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்களும் வயதானவர்களும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு சைக்கிளிங் செல்வது நல்லது. புதிதாக சைக்கிளிங் செல்பவர்கள் ஆர்வம் மிகுதியால் ஒரே நாளில் பத்து கிலோமீட்டர் சென்றுவிட வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக செல்லும் தூரத்தை அதிகப்படுத்துங்கள்.

லாக்டெளன் அறிவித்ததில் சைக்கிளிங் செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர். தற்போது லாக்டெளன் தளர்த்தப்பட்டிருப்பதால் பலர் மீண்டும் சைக்கிளிங் செல்ல தொடங்கிவிட்டனர். இது அவர்களின் உடல்நலத்துக்கு மிகவும் நல்லதுதான்.

இந்தக் கொரோனா காலத்தில் சைக்கிளிங் செல்வோர் உடல்நலத்தில் புதிய பாதிப்பு வராதிருக்க அவசியம் பின்பற்ற வேண்டிய 5 பழக்கங்களைத் தெரிந்துகொள்வோம்.

ஒன்று: வழக்கமாக சைக்கிளைத் துடைத்து சுத்தமாக வைத்திருப்பீர்கள். அதைத் தொடர்வதில் எந்தத் தவறும் இல்ல்லை. ஆனால், முக்கியமான இடங்களில் ஹேண்டில் பார், சீட் போன்றவற்றை சேனிடைஸைர் தெளித்து சுத்தப் படுத்துங்கள். ஏனெனில், வீட்டில் முன் நிறுத்தியிருக்கையில் யாரேனும் நோய் கிருமி உள்ளவர் தொட்டிருக்கக்கூடும். இல்லையென்றாலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதைச் செய்யுங்கள்.

இரண்டு: வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்லும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஒருவேளை இல்லாதவர்கள், அவசியம் வீட்டிலிருந்து வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். கடைகளில் தண்ணீர் குடிப்பதை சில நாட்களுக்கு நிறுத்துங்கள். இது மிகவும் அவசியமானது.

மூன்று: மாஸ்க் மிகவும் அவசியம். அதுவும் குழுவாக நண்பர்களோடு செல்பவர்களுக்கு ரொம்பவே அவசியம். நான் நேராகச் சென்று கிரண்டில் ரவுண்ட் அடித்துவிட்டு வரப்போகிறேன். நான் எதற்கு மாஸ்க் அணிய வேண்டும் என நினைக்காதீர்கள். அங்கு யாரேனும் உங்களோடு பேச வரலாம். அல்லது கிரவுண்டைப் பாதுக்காப்போர் இருப்பார்கள். அவர்களோடு பேச வேண்டியிருக்கலாம். அத்தோடு தற்போது தமிழ்நாடு அரசு மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது. எனவே மாஸ்க் அவசியம்.

ஒருவேளை மாஸ்க் அணிந்துகொண்டு சைக்கிள் ஓட்ட சிரமமாக இருக்கிறது என்றால், ஓட்டும்போது எடுத்து வைத்துவிட்டு, யாரோடு பேச வேண்டியிருந்தால் அப்போது மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். மாஸ்கை கழுத்தில் இழுத்துக்கொண்டு ஓட்டாதீர்கள். மாஸ்கை கழற்றி பேக்கில் வைத்துவிட்டு ஓட்டுங்கள். தேவையெனில் மாட்டிக்கொள்ளுங்கள்.

நான்கு: கைகளுக்கு கிளவுஸ் அணிந்துகொள்வது நல்லது. சைக்கிள் ஓட்டி ஒரு க்ரிப் கிடைப்பதோடு, யாரோடு சந்திக்கையில் மறந்து கைகுலுக்கி விட்டால் ஆபத்து இல்லாமல் இருக்கும். ஆனால், பல இடங்களில் கிளவுஸோடு கை வைத்துவிட்டு மூக்கில், கண்களில் அதை வைத்துவிடாதீர்கள்.

ஐந்து: எவ்வளவு பாதுகாப்பாக நாம் சென்றிருந்தாலும் நம் மீது ஏதேனும் கிருமிகள் ஒட்டியிருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, சைக்கிளிங் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் குளியலை முடித்துவிடுவது பாதுகாப்பாக இருக்கும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : காப்பக இயக்குநருக்கு போலீஸ் வலைவீச்சு!

பாலியல் தொல்லை கொடுத்த காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு...

“ஏன்யா நான் வேணாம் ,என் மகன் மட்டும் வேணுமா?” -காதலியின் மகனை கடத்திய தந்தை .

கல்யாணம் செய்யாமல் வாழ்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த மகனை கடத்திய ஒரு தந்தையை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சிறுவனை மீட்டார்கள்

‘சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு’ : அந்தர் பல்டி அடித்த பிரேமலதா

ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தனது ஆதரவு இருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகளுக்கிடையே தேர்தல்...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி கம்பம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!