ஹார்ட் அட்டாக் தவிர்க்க இந்த 5 விஷயத்தில் அலர்ட் தேவை!

 

ஹார்ட் அட்டாக் தவிர்க்க இந்த 5 விஷயத்தில் அலர்ட் தேவை!

உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களில் முதலிடத்தை வகிப்பது மாரடைப்பு. ஹார்ட் அட்டாக் காரணமாக திடீர் திடீர் என்று நெருக்கமானவர்கள் உயிரிழப்பது பற்றிய செய்தியைக் கேட்டாலும் கூட அதில் இருந்து தப்பிப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் நாம் எடுப்பது இல்லை.

50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மாரடைப்பு விரைவில் வருவதற்கான காரணங்கள் பற்றி இங்கே காணலாம்.

ஹார்ட் அட்டாக் தவிர்க்க இந்த 5 விஷயத்தில் அலர்ட் தேவை!
heart attack and heart disease

புகைப்பழக்கம்

சிகரெட் புகைக்கும் பழக்கம் இதய நோய் வருவதற்கான முக்கிய காரணியாக உள்ளது. அதிலும், அனைவராலும் தவிர்கக் கூடிய காரணியாகவும் சிகரெட் உள்ளது. ஒவ்வொரு முறை சிகரெட் பிடிக்கும்போதும் அது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை எட்டு நிமிடங்கள் அளவுக்கு விரைவுபடுத்துகிறது.

உடல் பருமன்

இதுவும் நம்மால் தவிர்க்கக் கூடிய ஒன்றுதான். உடல் பருமன் காரணமாக இதய நோய் மட்டுமல்ல, சர்க்கரை நோய், பக்கவாதம், மூட்டுவலி, கல்லீரல் செயல் இழப்பு என்று ஏராளமான நோய்கள் வரிசை கட்டுகின்றன. உடல் பருமனோடு சர்க்கரை நோயும் வரும்போது இதய ரத்தக் குழாய்கள் வீங்கிவிடுகின்றன. எனவே, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.

கொழுப்பு

கொலஸ்டிரால் அளவு அதிகரிக்கும்போது அது ரத்தக் குழாய்களில் படிந்து ரத்தக் குழாய் சுற்றளவைச் சுருக்கிவிடுகிறது. இதனால், எளிதில் மாரடைப்பு வருகிறது. மேலும், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதன் மூலம் அதன் விரிந்து சுருங்கும் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆண்டுக்கு ஒரு முறையாவது லிப்பிட் ப்ரொஃபைல் எனப்படும் கொழுப்பு அளவு பரிசோதனை செய்து, கொழுப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழுப்பு அதிகமாக இருந்தால், மருத்துவர் பரிந்துரையுடன் ஸ்டேடின் உள்ளிட்ட மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஹார்ட் அட்டாக் தவிர்க்க இந்த 5 விஷயத்தில் அலர்ட் தேவை!

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் வந்தால் தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புக்களுமே பாதிக்கப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதும் ரத்தக் குழாய் சுவரைப் பாதிப்படையச் செய்யும்.

மன அழுத்தம்

இதய நோய் வர மன அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் அதிகரிக்கும் போது கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரக்கிறது. கார்டிசோல் என்பது நம்மை பாதுகாக்கும் ஹார்மோன்தான். ஆனால், எப்போதாவது சுரக்கும்போது பாதிப்பு இல்லை. தினம் தினம் நாள் முழுக்க கார்டிசோல் அளவு ரத்தத்தில் அதிகமாக இருந்தால் அது இதய ரத்தக் குழாய்களை பாதிக்கிறது. எனவே, மன அழுத்தம் தவிர்க்க வேண்டும்.