இந்த 5 காரணங்களுக்காக தினமும் பூண்டு சாப்பிடலாம்!

 

இந்த 5 காரணங்களுக்காக தினமும் பூண்டு சாப்பிடலாம்!

பலருக்கும் பூண்டு பிடித்த உணவு. பூண்டு வாசனையே கூட பிடிக்கவில்லை என்று கூறுபவர்களும் உண்டு. உண்மையில் பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவு. உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு பூண்டுதான். பாரம்பரிய மூலிகை வைத்தியம் தொடங்கி, நவீன மருந்து வரை அனைத்திலும் பூண்டின் பயன்பாடு உள்ளது.

இந்த 5 காரணங்களுக்காக தினமும் பூண்டு சாப்பிடலாம்!

தோராயமாக 3 கிராம் எடை கொண்ட ஒரே ஒரு பூண்டு பல்லில் ஒரு நாளுக்குத் தேவையான மாங்கனீசு, வைட்டமின் பி6ல் 2 சதவிகிதம், வைட்டமின் சி, செலீனியம் 1 சதவிகிதம் உள்ளது. இது தவிரக் குறிப்பிடத் தகுந்த அளவில் கால்சியம், தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் பி1 உள்ளிட்டவையும் உள்ளன.

தினமும் பூண்டு சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வருபவர்களுக்கு 70 சதவிகிதம் அளவுக்கு சாதாரண சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுவது இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதய நோய் தவிர்க்க நினைப்பவர்கள் தினமும் சில பூண்டு பல்களை சாப்பிடலாம். இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

பூண்டு கெடுதலை ஏற்படுத்தும் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. இதய நோய் ஏற்பட டிரைகிளசரைட் முக்கிய காரணமாக இருக்கிறது. பூண்டு எடுத்துக்கொள்பவர்களுக்கு டிரைகிளசரைட் அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பூண்டில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட் அல்சைமர், டிமென்ஷியா எனப்படும் நினைவு திறன் இழப்பு, மறதி நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

பூண்டு மிகச்சிறந்த ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரலாக செயல்படுகிறது. இதை சாப்பிட்டு வந்தால் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியா பெருக்கத்தைத் தடுக்கிறது. ஈறுகள் வீக்கம் அடைவது, தளர்வுறுவது உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் பூண்டு காக்கிறது.