Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் டாய்லெட்டில் மொபைல் பார்ப்பதால் ஏற்படும் 5 பிரச்னைகள்!

டாய்லெட்டில் மொபைல் பார்ப்பதால் ஏற்படும் 5 பிரச்னைகள்!

இன்று திருவள்ளுவர் இருந்திருந்தால், ’மொபைலின்றி அமையாது இவ்வுலகு’ என்று எழுதியிருப்பார். ஏனெனில், எங்கே சென்றாலும் மொபைல் இல்லாமல் செல்வதே இல்லை. பஸ்ஸில், ஆட்டோவில் மொபைல் பார்த்துக்கொண்டே இருந்தால் பரவாயில்லை. டாய்லெட் செல்லும்போதும் மொபைலுடன் செல்லும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அதைப் பார்த்து குழந்தைகளும் அப்படிப் பழகுகிறார்கள்.

நேரத்தை மிச்சப்படுத்த டாய்லெட்டுக்கு மொபைல் எடுத்துச் செல்கிறேன் என்பவர்கள் ஒரு வகையினர். பலருக்கு எழுந்தவுடனே கழிவறை செல்லவேண்டும். அதேபோல, மொபைலில் அப்டேட்டும் பார்த்தாக வேண்டும்.

பேஸ்புக்

ஓர் ஆய்வில் டாய்லெட்டில் உட்கார்ந்து மொபைலில் என்ன பார்க்கிறீர்கள் எனக் கேட்டபோது, சோஷியல் மீடியாவில் இருப்பதாக 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியெனில், அது அவ்வளவு அவசியமானதா என்ற கேள்வி வருகிறது. இது சரியான பழக்கமா என்ற கேள்வி வேண்டாம். இது தவிர்க்க வேண்டிய பழக்கம்.

ஏன்? மொபைலை டாய்லெட்டில் பயன்படுத்தும்போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஐந்தை மட்டும் பார்ப்போம்.

ஒன்று: டாய்லெட் என்பது கிருமிகள் எளிதாக உருவாகும் இடம். அதனால்தான் டாய்லெட் சென்றவுடனே சோப் போட்டு, கைகால்களை நன்கு சுத்தம் செய்ய சொல்கிறார்கள். நீங்கள் அங்கு மொபைல் பயன்படுத்தும்போது மொபைலில் கிருமிகள் படர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்போது வரும் அழைப்பை அட்டெண்ட் பண்ணி பேசினால், கேட்கவே வேண்டாம். வாய் மற்றும் காதின் வழியே அவை உடலுக்குச் செல்லக்கூடும்.

இரண்டு: கழிவறையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது மலப்புழையை சுற்றி அழுத்தம் ஏற்படுகிறது. அதனால், செரிமானச் சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. மொபைல் பார்த்துக்கொண்டே உட்கார்ந்தால், பலருக்கு நேரம் காலம் போவதே தெரியாதே.

மூன்று: ஏதேனும் ஒரு நொடி அசந்தால், உங்கள் மொபைல் நீருக்குள் விழுந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே, விலையுயர்ந்த மொபைல் எனில் ஒரே நொடிக்குள் செயலிழந்து போய்விடும். வங்கி முதல் கேஸ் சிலிண்டர் வரை அந்த எண்ணைத்தான் கொடுத்திருப்பீர்கள். சிலர் மெயில் ஓப்பன் செய்யக்கூட ஓடிபி செட் பண்ணியிருப்பீர்கள். அதனால், கவனம் தேவை.

நான்கு: இந்தக் காலத்தின் நவீன செய்தி பரிமாறலாக லைவ் வீடியோக்கள்தான் என்று கூறப்படுகின்றன. முன்பே சொன்னதுபோல, டாய்லெட்டில் உட்கார்ந்து சோஷியல் மீடியாவில் அதிகம் செலவழிக்கும்போது உங்களையும் அறியுமால் லைவ் வீடியோ கேமரா ஆன் ஆகி விட்டால் டேஞ்சர்தான்.

ஐந்து: பப்ளிக் டாய்லெட் மட்டுமல்ல. வீட்டிலும் மற்றவர்கள் அவரசமாக டாய்லெட் செல்ல காத்திருக்கலாம். நீங்கள் நீண்ட நேரம் மொபைல் பார்த்துக்கொண்டே டாய்லெட்டில் உட்கார்ந்திருந்தால், அவர்கள் அவஸ்தை படுவார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

விசில் பறக்கணும், தடி பிடிக்கணும், செல்பி எடுக்கணும்- ராஜேந்திர பாலாஜி அதிரடி

விருதுநகரில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார், நிகழ்ச்சியில்...

“கேட்காமலே கொடுக்கிற அரசுதான் எடப்பாடி அரசு! திமுகவுக்கு ஆப்பு இருக்கு”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் அதிமுக கட்சியின் ஈரோடு புறநகா் மாவட்ட மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- கூலி தொழிலாளி உயிரிழப்பு

தேனி போடிநாயக்கனூர் அருகே ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழந்தார். கேரள மாநிலம் மூணாறை...

மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு!

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசு நாடாக அறிவித்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் ஆண்டு தொடங்கிய குடியரசுப்பயணம் 72ஆவது ஆண்டை எட்டியுள்ளது....
Do NOT follow this link or you will be banned from the site!