ஊரடங்கில் மதுவிற்பனை… கையும் களவுமாக பிடிபட்ட 5 குடிமகன்கள்!

 

ஊரடங்கில் மதுவிற்பனை… கையும் களவுமாக பிடிபட்ட 5 குடிமகன்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று முழு ஊரடங்கு அமலானது. 24ம் தேதி இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரையில் 30 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. டாஸ்மாக்குகளும் மூடப்பட்டிருந்தது.

ஊரடங்கில் மதுவிற்பனை… கையும் களவுமாக பிடிபட்ட 5 குடிமகன்கள்!

இந்த நிலையில், திருவள்ளூர் அருகே ஊரடங்கின் போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சோழவரம் விஜய நல்லூர் அருகே மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், உடனடியாக அந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு மதுவிற்பனை செய்துக் கொண்டிருந்த பரதன், சொக்கலிங்கம் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 220 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

ஊரடங்கில் மதுவிற்பனை… கையும் களவுமாக பிடிபட்ட 5 குடிமகன்கள்!

இதைத் தொடர்ந்து, பெரிய மாங்காடு பகுதியில் மது விற்பனை செய்த சீனிவாசன் மற்றும் மணிகண்டன் ஆகியோரையும் மீஞ்சூரில் மது விற்பனை செய்த பன்னீர் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தமாக 235 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.