பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய மேலும் 5 ஆண்டுகள் அவகாசம்!

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய மேலும் 5 ஆண்டுகள் அவகாசம்!

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய மேலும் 5 ஆண்டுகள் அவகாசத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய மேலும் 5 ஆண்டுகள் அவகாசம்!

குழந்தை பிறந்தவுடன் அதற்கான பிறப்பு சான்றிதழை வாங்குவது மிக முக்கியமான ஒன்று . இது சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்பது பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969 இல் கூறுகிறது.

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய மேலும் 5 ஆண்டுகள் அவகாசம்!

பிறப்பு சான்றிதழின் மூலம் தான் குழந்தையை பள்ளியில் சேர்க்க முடியும். அதனால் குழந்தை பிறப்பு குறித்து பதிவு செய்து அதனை 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் அந்தந்த பகுதி பதிவாளரிடம் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். ஆனால் 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் அவர்களின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து 1.1. 2000 முன் பிறந்த குழந்தைகளுக்கு 31. 12. 2014 வரை பெயர் பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டது . இதற்கான கால அவகாசம் 31.12.2019 வரை நீட்டிக்கப்பட்டது.

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய மேலும் 5 ஆண்டுகள் அவகாசம்!

இந்நிலையில் 1.1.2000க்கு முன் பிறந்த குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய தவறியவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது.