நீட் தேர்வால் தற்கொலை: மாணவன் குடும்பத்துக்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி!

 

நீட் தேர்வால் தற்கொலை: மாணவன் குடும்பத்துக்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி!

நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் குடும்பத்துக்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தேர்வு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படாது என தேர்வு முகமை தெரிவித்துவிட்டது. அதனால் அனைத்து எதிர்ப்புகளுக்கிடையே நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பலர் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

நீட் தேர்வால் தற்கொலை: மாணவன் குடும்பத்துக்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி!

நேற்று செந்துறை அருகே எலத்தங்குழியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்று அனிதா, இன்று விக்னேஷ் என நீட் தேர்வால் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருவதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உயிரிழந்த மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இந்த நிலையில் மாணவன் விக்னேஷ் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விக்னேஷின் வீட்டுக்கு நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின், அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி கொடுத்துள்ளார்.