”5 கி.மீட்டர் நீளத்திற்கு பெண்களின் துணியில் கலை படைப்பு” !குடும்ப வன்முறையை சித்தரிக்கும் வகையில் ஓவியர் முயற்சி !!

 

”5 கி.மீட்டர் நீளத்திற்கு பெண்களின் துணியில் கலை படைப்பு” !குடும்ப வன்முறையை சித்தரிக்கும் வகையில் ஓவியர் முயற்சி !!

ஈராக்கில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை சித்தரிக்கும் விதமாக, பாதிக்கப்பட்ட பெண்களின் துணிகளை கொண்டு 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரம்மாண்ட கலை படைப்பு ஒன்றை ஓவியர் ஒருவர் படைத்துள்ளார்.

ஈராக்கில் உள்ள குர்தீஷ் பகுதியை சேர்ந்தவர் தாரா அப்தல்லாஹ். ஓவியரான இவர், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளை பிரதிபலிக்கும் விதமான இத்தைகயை வித்தியாசமான ஓவியத்தை தீட்ட திட்டமிட்டார். அதன்படி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள சுலமனியா பகுதியில் கணவர் மற்றும் கணவனின் குடும்பத்தாரால் வன்முறைக்கு உள்ளான பெண்களை அணுகிய அவர், தனது நோக்கத்தை கூறி, அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகளை நினைவுப்படுத்தும் வகையிலான எதாவது ஒரு துணியின் கிழிந்த துண்டுகளை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

”5 கி.மீட்டர் நீளத்திற்கு பெண்களின் துணியில் கலை படைப்பு” !குடும்ப வன்முறையை சித்தரிக்கும் வகையில் ஓவியர் முயற்சி !!

அதன்படி குடும்ப வன்முறைக்கு உள்ளான பெண்கள் பலரும் அவருக்கு துணிகளை அளித்துள்ளனர். அவற்றை ஒரே சேர தைத்து ஒரு மிக நீளமான கலைநய படைப்பாக மாற்றி உள்ள அந்த ஓவியர், அங்குள்ள சுலமனியா நகரின் முக்கிய வீதிகளில் மொத்தம் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த தைக்கப்பட்ட துணிகளை கொண்டு கலைப்படைப்பை உருவாக்கி அத்துடன் வண்ணம் தீட்டி ஓவியமும் வரைந்துள்ளார்.

ஈராக்கில் தாம் மேற்கொண்ட ஆய்வின் போது, ஏராளமான பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளானது தெரியவந்துள்ளதாக கூறும் அவர், இதில் உள்ள ஒவ்வொரு துணிகளுக்கு பின்னாலும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அழுகுரல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • எஸ். முத்துக்குமார்