குழந்தைகளின் ஸ்கூல் பேக்கில் இருக்கக்கூடாத 5 பொருட்கள்!

 

குழந்தைகளின் ஸ்கூல் பேக்கில் இருக்கக்கூடாத 5 பொருட்கள்!

கொரோனா நோய்த் தொற்றால் பள்ளிகள் மூடி ஐந்து மாதங்களாக போகிறது. போகிறப்போக்கைப் பார்த்தால் பள்ளிகளே அடுத்த ஆண்டுதான் திறக்கப்படும் போலிருக்கிறது. இந்த நேரத்தில் ஸ்கூல் பேக் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கலாம்.

இந்த மாதத்தில் 1.6.9 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது தமிழக அரசு. அதனால், எப்போது வேண்டுமானாலும் சூழல் மாறலாம். அதனால், ரிலாக்ஸான இந்த நேரத்தில் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது நல்லதே.

குழந்தைகளின் ஸ்கூல் பேக்கில் இருக்கக்கூடாத 5 பொருட்கள்!

ஸ்கூல் பேக் என்பது குழந்தைகளுக்கு இன்னொரு உடை போல. எதைக் கொடுத்தாலும் அதில்தான் வைப்பார்கள். எதாவது காணோம் என்றால் முதலில் ஸ்கூல் பேக்கில்தான் தேடுவார்கள்.

எனவே, அதனுள் என்னென்ன வைத்திருக்கிறார்கள் என பெற்றோர் அவ்வப்போது சோதனை செய்வது அவசியம். ஸ்கூல் பேக்கில் என்ன வைத்துக்கொள்ள போகிறார்கள் என்ற அலட்சியம் வேண்டாம்.

என்னென்ன இருக்கின்றன என்பதைப் பார்ப்பதுபோல, என்னென்ன இருக்கக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டியதும் அவசியம். அப்படி முக்கியமாக 5 பொருட்கள் உங்கள் குழந்தையின் ஸ்கூல் பேக்கில் இருக்கக்கூடாது. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

குழந்தைகளின் ஸ்கூல் பேக்கில் இருக்கக்கூடாத 5 பொருட்கள்!

  1. கத்தி போன்ற கூரான பொருட்கள்: குழந்தைகள் விரும்பி அல்லது திட்டமிட்டு கத்தியை எடுத்து பேக்கில் வைத்துக்கொள்வது இல்லை. ஆனால், பென்சில் சீவ ஷார்பெனர் இல்லையெனில், கிடைப்பதை எடுத்து வைத்துக்கொள்ளக்கூடும். அது ரொம்பவே ஆபத்தானது.

    பெண் குழந்தை எனில், உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளை ஸ்கூல் பேக்கில் போட்டு வைத்துக்கொள்வர். ஆனால், புத்தகம், பேனா எடுக்கையில் விரல்களைப் பதம் பார்த்துவிடும். இன்னொரு ஆபத்தும் உண்டு. குழந்தைகளுக்குள் சண்டை எனில் இந்தக் கூரான பொருள்களைக் கொண்டு அடித்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம் அவசியம்.
    குழந்தைகளின் ஸ்கூல் பேக்கில் இருக்கக்கூடாத 5 பொருட்கள்!

  2. மொபைல்: பள்ளிக்குள் மொபைல் பயன்படுத்தக்கூடாது என்ற கண்டிப்பான விதி இருக்கிறது. ஆயினும் குழந்தைகள் பள்ளிக்கு மொபைல் கொண்டுவரத்தான் செய்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தையின் ஸ்கூல் பேக்கில் வைத்திருக்கிறார்களா என்று பாருங்கள்.

    ’எங்க பையன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்’ என்று 100 சதவிகிதம் நம்பும் பெற்றோராக இருந்தாலும் செக் பண்ணுங்கள். ஏனெனில் சில பெரிய பையன் வீட்டுக்கு மொபைல் எடுத்துச் செல்ல பயந்து சின்ன பையன்களிடம் கொடுத்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. எனவே, அந்தக் கோணத்தில் பார்த்து செக் பண்ணுங்கள்.

    ஒருவேளை மொபைல் இருந்தால் இருந்தால் பதறியடித்துக்கொண்டு, பையனைப் போட்டு அடிக்காமல் நிதானமாக அந்த போன் யாருடையது… எப்படி பையில் வந்தது என விசாரியுங்கள்.
    குழந்தைகளின் ஸ்கூல் பேக்கில் இருக்கக்கூடாத 5 பொருட்கள்!

  3. மற்றவர் புத்தகங்கள்: ஸ்கூல் புக்கில் இருக்கும் புத்தகங்கள்தானே என்று அதை செக் பண்ணாமல் விட்டுவிடாதீர்கள். அந்தப் புத்தகங்கள் யாருடையவை என்றும் சோதியுங்கள்.

    சில குழந்தைகள் விளையாட்டாக மற்றவர் புத்தகங்களை எடுத்து வந்துவிடுவர். சில குறும்புக்கார மாணவர்கள் ஒருவர் புத்தகத்தை எடுத்து மற்றவர் பையில் போட்டுவிடுவர். இது தெரியாமல் அடுத்த நாள் பள்ளியில் ஸ்கூல் பேக்கை சோதனையிட்டால் உங்கள் பிள்ளை திருடியதாகக் கருதப்படும்.

    எனவே பெற்றோர் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
    குழந்தைகளின் ஸ்கூல் பேக்கில் இருக்கக்கூடாத 5 பொருட்கள்!

  4. பணம்: நீங்கள் தரும் பாக்கெட் மணி என்பது வேறு. ஆனால், அதைத் தாண்டியும் அதிகப் பணம் வைத்திருக்கூடும். அப்படி இருக்கும்பட்சத்தில் நிதானமாக விசாரியுங்கள்.

    அந்தப் பணம் நீங்களோ உறவினர்களோ தந்தவற்றைச் சேமித்து வைத்துக்கூட இருக்கலாம். அதனால் குற்றவாளியை விசாரிக்கும் தொனி இல்லாது மென்மையாக விசாரித்து உண்மையை அறியுங்கள்.
    குழந்தைகளின் ஸ்கூல் பேக்கில் இருக்கக்கூடாத 5 பொருட்கள்!

  5. சாதி கயிறு: இது ரொம்பவே முக்கியமான விஷயம். சாதி சங்கங்களின் குறி மாணவர்களாகத்தான் இருக்கின்றன. அவர்களுக்கு சாதியைக் குறிக்கும் வண்ணத்தில் கயிறு கொடுத்து கட்டிவிடுகிறார்கள்.

    அதன்மூலம் ஏதேனும் சண்டை வந்தால் பள்ளிக்குப் போய் சமாதானம் செய்கிறார்கள். இதன்மூலம் சாதி சங்கங்களின் தொடர்பிலேயே மாணவர்களை வைத்திருக்கும் வேலையைச் செய்கிறார்கள். இது மிகவும் சென்சிட்டிவான விஷயம்.

    அதனால், ஒருவேளை உங்கள் குழந்தையின் ஸ்கூல் பேக்கில் சாதிக் கயிறு இருந்தால் மிகுந்த கவனத்தோடு அந்தப் பிரச்னையைக் கையாளுங்கள். தாமதம் செய்யக்கூடாத விஷயம் இது.