“போலி இ-பாஸ்”.. சென்னையில் தலைமைச் செயலக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது!

 

“போலி இ-பாஸ்”.. சென்னையில் தலைமைச் செயலக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கொரோனா வைரஸ் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் மக்கள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்றும் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இ-பாஸ் கட்டாயமாகத் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மற்ற மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களும் இ-பாஸ் பெற்றுக் கொண்டு தான் வர வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இதனிடையே போலியான இ-பாஸ் பெற்று செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு போலியான இ-பாஸ் பெற்று மக்கள் செல்வது கண்டுபிடிக்கப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“போலி இ-பாஸ்”.. சென்னையில் தலைமைச் செயலக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது!

இந்த நிலையில், போலி இ-பாஸ் வழங்கியதற்காகச் சென்னை மாநகராட்சி மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் 5 பேர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். போலி இ-பாஸ் மூலம் பயணம் செய்யும் சாதாரண மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசு அதிகாரிகளே இத்தகைய அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.