Home லைப்ஸ்டைல் 40 வயதைக் கடந்தவர்கள் கவனிக்க வேண்டிய 5 பொருளாதார விஷயங்கள்

40 வயதைக் கடந்தவர்கள் கவனிக்க வேண்டிய 5 பொருளாதார விஷயங்கள்

நாற்பது நமக்கே என்பது பாராளுமன்ற தேர்தலில் வேண்டுமானால் கவர்ச்சிகரமான வாக்கியமாக இருக்கலாம். ஆனால், தனிமனிதர் வாழ்க்கையுல் 40-யைத் தொட்டதும் மனதிற்குள் சற்று பயம் வரும்.

ஏனெனில், அதுவரை விளையாட்டாக, காலம் குறித்த எவ்வித சிந்தனையும் இல்லாமல் இருந்திருப்பார்கள். உடலும் அதற்கு ஒத்துழைத்திருக்கும். ஆனால், நாற்பதைத் தொட்டதும் உடலும் மனமும் சற்றே பின்னிழுக்கும்.

என்னவெல்லாம் செய்திருக்கலாம்… ஆனால், செய்யாமல் விட்டுவிட்டோமே என்று மனம் குழப்பம் அடையும். அப்படியானவர் எனில் அந்தக் குழப்பங்களை எல்லாம் தூர எறியுங்கள்.

40 வயதைக் கடந்ததும் உடலை மனத்தை மட்டுமல்ல பொருளாதாரம் சார்ந்த சில விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். முதலீடா… சேமிப்பா என்பது தொடங்கி இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான 5 விஷயங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.

முதலீடு எங்கு ஏன்? : இன்னும் 15 – 20 வருடங்கள் உங்களுக்கு வருமானம் வர வாய்ப்பிருக்கிறது. எனவே உங்களின் முதலீட்டை இதற்கு ஏற்றார் போல திட்டமிடுங்கள்.

மேலும், இப்போதுள்ள வேலையில் வருமானமும் குடும்ப செலவுகள் போக எவ்வளவு ஒதுக்க முடியும் என்பதை கறாராக வரையறுங்கள். அதன்பின், அந்தத் தொகைக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். தேவை ஏற்படின், பொருளாதார நிபுணர்களின் உதவியக் நாடவும் தயங்காதீர்கள்.

share market

பங்குச் சந்தையில் கவனம் வேண்டாம்: பொதுவாகவே பங்கு சந்தை ஆபத்து நிறைந்தது. ஒருவரை தூக்கியும் விடும்; பாதாளத்தில் இறக்கியும் விடும். எனவே, அதிக ரிஸ்க் எடுக்கும் வயது அல்ல இது.

எனவே, அதிக ரிஸ்க் உள்ள பங்குச் சந்தை முதலீடுகளைத் தவிருங்கள். அதிக பணம் ரிட்டர்ன் வரும் என்றாலும் உறுதியாக மறுத்துவிடுங்கள். பரஸ்பர நிதி போன்றவற்றில் முதலீடு செய்யலாம். அதற்கும் பொருளாதார நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.

வரவும் செலவும்: வரும் வருமானத்திற்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது என்ற நிலையை மாற்றுங்கள். வருமானத்தின் 50 சதவிகிதத்திற்குள் செலவுகளைச் சுருக்க பாருங்கள்.

அப்போதுதான் அது 60-70 சதவிகிதத்தில் நிற்கும். எனவே, மீதம் இருக்கும் 30 சதவிகித பணத்தை முன்பு திட்டமிட்டபடி ரிஸ்க் இல்லாத முறையான ரிட்டர்ன் வரும் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

நோ கடன்: கிரடிட் கார்ட் எனும் ஆசை காட்டும் பூதம் உங்களை அழைத்துக்கொண்டே இருக்கும். அதன் பேச்சைக் கேட்கத் தொடங்கிவிட்டால், வீட்டில் தேவையில்லாத பொருள்கள் சேர்ந்துகொண்டே இருக்கும். மாதந்தோறும் சம்பளத்தின் பெரும் தொகை அதற்கு தீனியாகப் போய்கொண்டிருக்கும்.

மேலும், வேறு ஏதேனும் கடன்கள் இருப்பின் விரைந்து முடிப்பதற்கு திட்டமிடுங்கள். தாமதிக்கும் நாட்கள் விரயம்தான் என்பதை உணருங்கள்.

கனவு அல்ல திட்டம்: இந்த வயதில் கனவு காண்பது தேவையற்ற ஒன்று. அந்தளவு நிதானித்து செயல்பட அல்லது ஒன்றில் தோற்று மற்றொன்றில் வெற்றி பெற காலம் இல்லை. அதனால், கனவு காண்பது என்பதைத் தவிர்த்து தெளிவான திட்டங்களே உங்களுக்கு உதவும்.

அதாவது இன்னும் 10 வருடங்களில்… இன்னும் 15 வருடங்களில்… இன்னும் 20 வருடங்களில் என்று உங்களின் திட்டங்கள் செயல்முறைக்கு ஏற்றதாக அமையட்டும். கதைக்கு உதவாத கனவுகள் உங்களைச் சோர்வடையவே செய்யும். எனவே அவற்றிலிருந்து வெளியேறுவதை முதல் கடமையாகச் செய்யுங்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மாத்திரை மருந்து இன்றி மனப் பதற்றத்தில் இருந்து விடுபட 8 வழிகள்!

வேலை, கடன் பிரச்னை, குடும்பம், உடல் நலம் என பல பிரச்னைகள் ஒவ்வொருவரையும் போட்டு வாட்டி வதைக்கிறது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் கூட மனப் பதற்றம் பிரச்னை உள்ளது. நமக்கு...

ஆரோக்கியத்தைக் காக்க உதவும் ஐந்து உணவு பழக்கங்கள்!

ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை நாம் எடுத்துக்கொள்ளும் உணவு. உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை ஒரு நாள், சில நாள், பல நாட்கள் கூட தவறவிடலாம். ஆனால், உணவு அப்படி இல்லை. நம்முடைய உடலின்...

தனித்து போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை- விஜய பிரபாகரன்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளன. அதற்கான பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்கிவிட்டன. தேர்தலுக்கான கூட்டணி பற்றி கட்சிகளுக்குள்ளாக பேச்சுவார்த்தை நடக்கிறது....

வீட்டின் முன் நின்ற இருசக்கர வாகனம் திருட்டு… சிசிடிவி பதிவு வெளியீடு…

திருப்பத்தூர் வாணியம்பாடியில் வீட்டின் முன்பு நின்ற இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்...
Do NOT follow this link or you will be banned from the site!