’ஈகோ’வுக்கு குட்பை சொல்ல வைக்க ஈஸியான 5 வழிகள்

 

’ஈகோ’வுக்கு குட்பை சொல்ல வைக்க ஈஸியான 5 வழிகள்

’அவரோடு பேசி பத்து வருஷத்துக்கும் மேல இருக்கும்’ இப்படிச் சொல்லுபவர்கள் எவரேனும் ஒருவராவது உங்கள் நட்பு வட்டத்தில் இருப்பார்கள். உங்களோடு பல ஆண்டுகள் பேசாத நட்பு அல்லது உறவு இருக்கக்கூடும். அப்படியிருக்க என்னதான் காரணம்?

மாற்றம் ஒன்றே மாறாதது எனும் இந்த உலகில், என்ன காரணத்திற்காக பிரிந்தார்களோ… அதன் சூழல் மாறியபின் அந்தக் காரணமும் வலுவிழந்து போயிருக்கும். உதாரணமாக, ஒரு திருமணத்தின்போது, புது மாப்பிள்ளையான தன்னை சரியாகக் கவனிக்க வில்லை என்று கோபித்துக்கொள்வார்கள்.

’ஈகோ’வுக்கு குட்பை சொல்ல வைக்க ஈஸியான 5 வழிகள்

அந்தக் கோபம் வருஷக்கணக்கில் பேசாமல் இருந்துவிடுவார்கள். ஆனால், ஓரிரு வருடங்கள் கழித்து சூழலே மாறியிருக்கும். ஆனால், அந்தக் கோபம் மட்டும் இருக்கும். அதற்கு ஒரே காரணம், ஈகோ.

நாம் ஏன் மன்னிக்கணும், நாம் ஏன் முதலில் இறங்கி போகணும் என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சில விஷயங்களை நாம் மாற்றிக்கொண்டால் ஈகோவுக்கு குட்பை சொல்லலாம். அப்படியான 5 எளிமையான வழிகள் இதோ.

’ஈகோ’வுக்கு குட்பை சொல்ல வைக்க ஈஸியான 5 வழிகள்

ஒன்று: Yes போலவே No வும் ரொம்ப முக்கியம். சில நேரங்களில் நம்மிடம் கேட்கும் உதவிக்கு அல்லது சொல்லப்படும் வேலைக்கு உடனே Yes சொல்லிவிடுவோம். அதை நம்மால் செய்யமுடியுமா என்றுக்கூட யோசிப்பதில்லை. அதனால், அந்த வேலையைச் செய்ய முடியாமல் போய்விடும். நாம் சொல்லி, சரி என்று சொன்ன வேலையைச் செய்யவில்லையே என்று அவருக்கு ‘ஈகோ’ தொடங்கும் புள்ளியில் அதை உடைத்துவிடுங்கள்.

’ஈகோ’வுக்கு குட்பை சொல்ல வைக்க ஈஸியான 5 வழிகள்

இரண்டு: போட்டி போடுங்கள். யார் மன்னிப்பு கேட்பது என்று போட்டிப் போடுங்கள். யார் மீது தவறு இருந்தாலும் அந்தச் சூழலை இறுக்கத்திற்கு கொண்டு செல்லாதிருக்கவும், மற்றவரின் ஈகோவைத் தொட்டுவிடாமல் இருக்கவும், முதலில் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள். ஒரு தவறை மன்னிப்புக்குப் பிறகு யோசிக்கும்போதுதான் அந்தத் தவற்றை யார் செய்தது என்று உண்மையாகப் புரியும். அதனால், தவறு அவர் மீது இருந்தாலும் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள். அவை வெறும் சொற்கள்தான். எதிரே நிற்பது உங்களின் நட்பு என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் மன்னிப்புக்குப் பின் தவறு தன்னுடையதுதான் என்று எதிரில் இருப்பவர் உணர்ந்தால் உங்கள் மீதான மதிப்பு உயரவே செய்யும்.

’ஈகோ’வுக்கு குட்பை சொல்ல வைக்க ஈஸியான 5 வழிகள்

மூன்று: மனதை திறந்து வைய்யுங்கள். பல நேரங்களில் பெரும் பிரச்னையே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என மற்றவர் புரிந்துகொள்வதில் உள்ள சிரமமே. அதனால், இருவருக்கும் பொதுவான ஒரு விஷயம் பற்றி உங்கள் கருத்தை மறைக்காது வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். அப்படிச் சொல்லும்போது அவரும் தம் கருத்தைச் சொல்வார். நல்ல உரையாடல் நிகழும். குழப்பம் ஏதும் இல்லாமல் அந்த வேலை முடியும்.

’ஈகோ’வுக்கு குட்பை சொல்ல வைக்க ஈஸியான 5 வழிகள்

நான்கு: உங்கள் நண்பர் அல்லது உறவினர் பாராட்டும்படி சின்ன விஷயம் செய்திருந்தாலும் தயங்காது மனம் திறந்து பாராட்டுங்கள். இவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கிறேன். ஊரே கொண்டாடுகிறது. இவன் ஒரு வார்த்தை சொல்கிறானா என்று அவரை யோசிக்க வைத்து விடாதீர்கள். நீங்கள் வேலை பளுவால், சரி நம்ம நண்பன் தானே என்று பாராட்டாமல் விட்டிருப்பீர்கள். அவரோ பொறாமைப் பட்டு பாராட்டத் தயங்குவதாக நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

’ஈகோ’வுக்கு குட்பை சொல்ல வைக்க ஈஸியான 5 வழிகள்

ஐந்து: நன்றி சொல்லுங்கள். பாராட்டைப் போலவே நன்றியும் மிக முக்கியம். ஏனெனில், உங்களுக்கு ஒருவர் செய்த உதவி மிகச் சிறியதோ மிகப் பெரியதோ அவர் முதலில் உங்களிடமிருந்து எதிர்பார்பது ‘நன்றி’ எனும் சொல்லைத்தான். அதன்பிறகுதான் அந்த உதவிக்கு பிரதிபலன் எதிர்பார்ப்பதெல்லாம். அதனால், நன்றி எனும் சொல்வது உங்களின் இயல்புகளில் ஒன்றாக மாறும்படி அமைத்துக்கொள்ளுங்கள். ஈகோ தொற்றிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.