“பாலியல் வழக்கில் சிக்கிய காசி” அடுக்கடுக்காக குவியும் புகார்கள்: 5 நாட்கள் போலீஸ் காவல்!

“பாலியல் வழக்கில் சிக்கிய காசி” அடுக்கடுக்காக குவியும் புகார்கள்: 5 நாட்கள் போலீஸ் காவல்!

பாலியல் வழக்கில் சிக்கிய நாகர்கோவில் இளைஞர் காசி மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்ததால், 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

“பாலியல் வழக்கில் சிக்கிய காசி” அடுக்கடுக்காக குவியும் புகார்கள்: 5 நாட்கள் போலீஸ் காவல்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் காசி(26). இவர் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி, நிர்வாண புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பதே வேலையாக கொண்டிருந்தார். அந்த பெண்களுள் நடிகர்களின் மகள்களும், விஐபிகளின் மனைவிகளும் அடங்குவர். பல பெண்களை ஏமாற்றி கார், பங்களா வாங்கி குவித்த காசி மீது முதன்முதலில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் புகார் அளித்ததால், காசியின் லீலைகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து பல பெண்கள் அவர் மீது புகார் அளித்தனர்.

“பாலியல் வழக்கில் சிக்கிய காசி” அடுக்கடுக்காக குவியும் புகார்கள்: 5 நாட்கள் போலீஸ் காவல்!

அந்த புகாரின் பேரில் காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் நில மோசடி, கந்துவட்டி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து காசி மீதான புகார்கள் குவிந்ததால், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், காசிக்கு வலது கையாக ஜினோ(19) என்பவர் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் காசியின் தந்தைக்கும் தொடர்பு இருந்ததால், அவரும் கைது செய்யப்பட்டார்.

“பாலியல் வழக்கில் சிக்கிய காசி” அடுக்கடுக்காக குவியும் புகார்கள்: 5 நாட்கள் போலீஸ் காவல்!

காசி மீதான கந்துவட்டி வழக்கை தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த மேலும் ஒரு பெண் ஒருவர் காசி மீது புகார் அளித்துள்ளார். இதனால் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 11ம் தேதி முதல் 5 நாட்கள் காசியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினர். நாளை மறுநாள் விசாரணை தொடங்கவிருக்கும் நிலையில், காசி செய்த குற்றங்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.