சீரியஸ் நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகம் உள்ள 5 நாடுகள்!

 

சீரியஸ் நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகம் உள்ள 5 நாடுகள்!

கொரோனா நோய்த் தொற்று உலகையே ஸ்தம்பித்து முடங்க வைத்துவிட்டது. ரஷ்யா கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக வர வில்லை.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரத்து 974 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 83 லட்சத்து 60 ஆயிரத்து 305 நபர்கள்.

சீரியஸ் நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகம் உள்ள 5 நாடுகள்!

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 81 ஆயிரத்து 453 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 83,08,216 பேர்.

உலகம் முழுவதும் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களில் சீரியஸ் நிலையில் இருப்பவர்கள் 1 சதவிகிதம்தான். அதில் எந்தெந்த நாடுகளில் அதிகம் இருக்கிறது எனப் பார்ப்போம்.

சீரியஸ் நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகம் உள்ள 5 நாடுகள்!

முதல் இடத்தில் அமெரிக்கா: இங்கு மொத்த பாதிப்பு 79,93,215. மரணம் அடைந்தவர்கள் 2,19,708 பேர். தற்போது சிகிச்சையில் இருப்போர் 26,45,010 பேர். அவர்களில் சீரியஸ் நிலையில் இருப்போர் 14,741 பேர்.

இரண்டாம் இடத்தில் இந்தியா: இங்கு மொத்த பாதிப்பு 71,28,268. மரணம் அடைந்தவர்கள் 1,09,285 பேர். தற்போது சிகிச்சையில் இருப்போர் 8,69,448 பேர். அவர்களில் சீரியஸ் நிலையில் இருப்போர் 8,944 பேர்.

சீரியஸ் நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகம் உள்ள 5 நாடுகள்!

மூன்றாம் இடத்தில் பிரேசில்: இங்கு மொத்த பாதிப்பு 50,94,979. மரணம் அடைந்தவர்கள் 1,50,506 பேர். தற்போது சிகிச்சையில் இருப்போர் 4,74,308 பேர். அவர்களில் சீரியஸ் நிலையில் இருப்போர் 8,318 பேர்.

நான்காம் இடத்தில் ஈரான்: இங்கு மொத்த பாதிப்பு 5,04,281. மரணம் அடைந்தவர்கள் 28,816 பேர். தற்போது சிகிச்சையில் இருப்போர் 66,344 பேர். அவர்களில் சீரியஸ் நிலையில் இருப்போர் 4,533 பேர்.

சீரியஸ் நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகம் உள்ள 5 நாடுகள்!

ஐந்தாம் இடத்தில் அர்ஜெண்டினா: இங்கு மொத்த பாதிப்பு 8,94,206. மரணம் அடைந்தவர்கள் 23,868 பேர். தற்போது சிகிச்சையில் இருப்போர் 1,48,958 பேர். அவர்களில் சீரியஸ் நிலையில் இருப்போர் 4,237 பேர்.

ஆறாம் இடத்தில் மெக்சிகோ, ஏழாம் இடத்தில் ரஷ்யா, எட்டாம் இடத்டில் கொலம்பியா, ஒன்பதாம் இடத்தில் பிலிப்பைன்ஸ், பத்தாம் இடத்தில் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன.